மாற்றிப் போட்ட ஒரே ஒரு வார்த்தையால் ஓஹோவென ஹிட் ஆன பாடல்… இப்படி ஒரு சீக்ரெட்டா?

2006-ம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படம் அப்போது காதல் திருமணம் செய்தவர்களுக்கு ஒரு எவர்கிரீன் படமாகவே இருந்திருக்கும். சூர்யா-ஜோதிகா-பூமிகா-சந்தானம் நடித்த இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டது. அதில் சூர்யா-பூமிகாவின் காதல் காட்சிகள் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கும் ரகத்தைச் சேர்ந்தவை.

இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் எப்போதுமே ரசிகர்களால் முணுமுணுக்கும் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. இப்படத்தில் இடம்பெற்ற முன்பே பாடல் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.

இப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட மெட்டின் அடிப்படையில் வாலி “அன்பே வா… என் முன்பே வா!” என்று எழுதினாராம். முழுப் பாடலையும் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் ரஹ்மான் இப்பாடலின் முதல் வரியை மட்டும் மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறார். சில மெட்டுகள் போடும்போதே அவற்றின் வெற்றி உறுதியாகிவிடும். அதை உணர்ந்த ரஹ்மான் இப்பாடலின் முதல் வரி “முன்பே வா…என் அன்பே வா!” என்று மாற்றச் சொல்லியிருக்கிறார்.

Munbe va

அப்படி வாலி பாடலை “முன்பே வா“ என்று மாற்றியமைக்க எதிர்பார்ப்பிற்கும் மேலான வெற்றியைப் பெற்றது.  ஸ்ரேயா கோஷல், நரேஷ் ஐயர் போன்ற பாடகர்களின் வசீகரிக்கும் குரலும், அதைக் காட்டிலும்  கவர்ந்திழுக்கும் இசையும், பின்னணி குழுவும், அதை சிறப்பான காட்சியமைப்பால் திரையில் காண்பித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என ஒரு குழுவே இப்பாடலின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தனர். ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த ஹிட் பாட்டெல்லாம் இவங்க எழுதியதா? இது தெரியாமப் போச்சே..!

மேலும் இந்த டியூன் உருவாக்கத்தின் போது இதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று ஏ.ஆர்.ரஹ்மான் தயங்கிய போதிலும் இயக்குநர் இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூற முழுப்பாடலையும் கம்போஸ் செய்தாராம் இசைப்புயல். மேலும் இந்தப்படத்தில் வந்த கும்மியடி பாடலும், நியூயார்க் நகரம் பாடலும், வடிவேலுவின் காமெடி அலப்பறையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் நின்றது.

இப்படி ஒவ்வொரு ஹிட் பாடலுக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருப்பதும், அதைவிட படக்குழுவின் உழைப்பும் பாடல்களை ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்து விடுகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...