டெல்லியில் தீவிரமாக நடக்கும் தக் லைஃப் ஷூட்டிங்!.. கமல்ஹாசன் கூட யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் தக்லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. கமல் தயாரிப்பில் சிம்பு எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கப் போவதாக கடந்த ஒரு வருடமாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த படம் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தப் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

டெல்லியில் தக் லைஃப்:

ஜோதிகாவை போல சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஓட்டு போடாமல் தொடர்ந்து படப்பிடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இந்நிலையில், கமலுடன் டெல்லியில் சூட்டிங் செய்யும் சிம்புவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

GM3NNIjW0AAyYmd

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் எனும் படத்தை பிரம்மாண்டமாக மும்பையில் படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டும் சேர்ந்து 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி தந்த நிலையில், மணிரத்னம் உடன் இணைந்து பணியாற்றும் முடிவை எடுத்த கமல்ஹாசன் எச். வினோத் படத்தை கழட்டி விட்டுவிட்டார்.

முதலில் இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறப்பட்டன. இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக அசோக் செல்வன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக கூறுகின்றனர்.

விருமாண்டி படத்துக்கு பிறகு கமலுடன் இணைந்து நடிகை அபிராமி நடித்து வருகிறார். கமல்ஹாசன், அபிராமி, சிம்பு, நாசர் மற்றும் வையாபுரி ஆகிய படக்குழுவினர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கட் மோட்சன் அனுமான் கோயிலில் தற்போது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளதாக போட்டோவுடன் தகவல் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...