நடுரோட்டில் காரில் இருந்து இறங்கி ஓடிய எம்.ஜி.ஆர்!.. அங்கதான் இருக்கு ட்விஸ்ட்!..

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக ஜப்பான் சென்று உள்ளார். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை பார்க்க காரில் டோக்கியோ நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ”நாயர் டீ ஸ்டால்” என்ற போர்டை பார்த்து ஆச்சரியப்பட்டார். உடனே காரை நடுரோட்டில் நிப்பாட்ட சொல்லி இறங்கி ஓடினார். அங்கு அந்த கடையின் முதலாளியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

அது என்னவென்றால் எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக ஜொலிப்பதற்கு முன்னால் சென்னையில் தன் அம்மா சத்தியா உடன் வறுமையின் பிடியில் சிக்கி சென்ட்ரல் பகுதியில் வாழ்ந்து கொண்டு வந்தார். ஒரு நாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை அதை வாங்குவதற்கும் பணம் இல்லாமல் பஞ்சபிடியில் தவித்து வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் அருகில் ராமன் குட்டி என்பவர் எம்.ஜி.ஆரின் வறுமை நிலையை உணர்ந்து அவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்து உதவினார்.

அந்தப் பணத்தில் அன்று அவர்கள் உணவு உண்டு அன்றைய பொழுதை கழித்தனர். இது எம்.ஜி.யாருக்கு மறக்க முடியாத நினைவாக மனதிற்கு இருந்தது. ஏழ்மையில் அவரின் குடும்பம் வாடிய போது யார் யாரெல்லாம் அவருக்கு உதவி செய்தார்களோ அவர்களைப் போலவே அதே எண்ணத்துடன் எம்.ஜி.ஆரும் பிற்காலத்தில் உதவி என்று வந்தவருக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். பின்னர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்த பின்னர் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகவும் உயர்ந்தார்.

அந்த ராமன் குட்டி ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு டோக்கியோவில் டீக்கடை வைத்திருக்கிறார் என்பது தெரிந்ததும் எம்.ஜி.ஆர் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன் பின்னர் பழசை மறக்காமல் தனக்கு அன்று செய்த உதவியை நினைத்து ராமன் குட்டிக்கு போதும் போதும் என்ற அளவிற்கு பொருள் உதவி செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews