தமிழ் சினிமாவின் முதல் கலர் படம்! எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படமா?

முதன் முதலில் 1873- இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எட்வர்ட் மேபிரிட்ஜ், குதிரையின் ஓட்டத்தை படம் பிடித்தார். அதுவே முதல் நகரும் படமாகும். பின் 1895ல் லூமியர் பிரதர்ஸ் முதன்முதலில் அவர்களுடைய தொழிற்சாலையிலிருந்து, தொழிலாளர்கள் வெளியே செல்வதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர்.

இது வெறும் 46 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய பிளாக் அண்ட் ஒயிட், சைலண்ட் படமாகும். வெளிநாடுகளில் மேடை நாடகங்கள், சினிமாக்களாக மாற ஆரம்பித்தது. அதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து இங்கிலாந்திற்கு பொறியியல் படிக்கச் சென்றவர் டி. ஆர் சுந்தரம். அவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு படம் எடுக்க ஆரம்பித்தார். டி.ஆர் சுந்தரம் போன்ற சினிமா ஆர்வலர்கள், தமிழ்நாட்டிலும் படம் எடுக்ககூடிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். சேலத்தை மையமாகக் கொண்டு இவரது திரைப்பட நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் செயல்பட்டது. எம்.ஜி. ஆருக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது இந்த மாடர்ன் டைம்ஸ் தயாரித்த படம்தான். அப்படம் 1950ல் வெளியான ‘மந்திரக்குமாரி’.

t.r sundaram

அப்போது கருப்பு வெள்ளை படங்களை மட்டுமே எடுக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் இருந்தது. காலப்போக்கில் வெளிநாடுகளில் கலர் படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஃபிலிம் ரோல்களை கைகளால், வண்ணம் தீட்டும் முறையே இருந்தது. ஒருசில படங்களில் ஒரு பாடல் மட்டும் கலரில் இடம்பெறும். அதைப் பார்ப்பதற்காக மக்கள் தியேட்டர்களில் அலை மோதுவார்கள்.

1956ல் ‘Gevacolor’ எனும் முறையை பயன்படுத்தி, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ முழு நீள கலர்ப்படமாக வெளியானது.இப்படத்தை டி.ஆர் சுந்தரம் இயக்கி தயாரித்திருந்தார். இதில், எம்.ஜி. ஆர், பானுமதி, பி.எஸ் வீரப்பா, மற்றும் கே.ஏ தங்கவேலு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

‘அலிபாவும் 40 திருடர்களும்’ படத்திற்கு பிறகு, இயக்குனர்கள் கட்டாயம் கலர் படங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இருப்பினும், செலவு அதிகம் என்பதால், படத்தில் ஒருசில காட்சிகளை மட்டும் கலரில் வைத்தனர். பின், கலர் படங்கள் எடுப்பதற்கான தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தது.

1964ல் முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ் மற்றும் பாலைய்யா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’ இஸ்ட்மேன் கலரில் வெளியானது. இப்படியாக ஆரம்பித்த கலர் படங்கள் தற்போது அடைந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி அளவிட முடியாதது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews