எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டையே ஆண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரின் குழந்தைகள் ஆனாலும் அவரின் மனதிற்குள் தனக்கென்று பெயர் சொல்ல ஓர் இரத்த உறவு இல்லையே என்று மனதிற்குள்ளேயே கடைசி வரை பூட்டி வைத்து அழுதிருக்கிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது பாணியில் இருந்து ஹீராயிசம் இல்லாமல் நடித்த படம் தான் ‘பெற்றால் தான் பிள்ளையா?‘ இந்தப் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ். எம்.ஜி.ஆரின் வாழ்வில் இந்தப் படம் பெரிதும் ஒன்றிப் போயிருக்கிறது. இது குறித்து வசனகார்த்த ஆரூர் தாஸிடம் எம்.ஜி.ஆர் மனம் விட்டுப் பேசியிருக்கிறாராம். அதில்,

என் வாழ்க்கையில் ஏற்பட்ட நான் எனக்கிருந்த அனைத்துக் குறைகளையும் போக்கி விட்டேன். ஆனால் இரு குறைகளை மட்டும் என்னால் போக்க முடியவில்லை. ஒன்று எனக்குக் குழந்தைகள் இல்லாதது. மற்றொன்று என்பதற்குள் ஆரூர் தாஸ் இடைமறித்து பெருந்தலைவர் காமராசருக்குக் கூடத்தான் வாரிசுகள் கிடையாது என்றிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆரோ அவர் திருமணமே செய்து கொள்ளாதவர். ஆனால் நான் அப்படி அல்ல இரண்டு திருமணங்களையும் செய்தும் எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை.

முதல் மனைவி சதானந்தவதியம்மா இருமுறை கருத்தரிச்சு பின் சில நாட்களில் அபார்ஷன் ஆகி விட்டது. ஜானகிக்கோ எனக்காக குழந்தை பெற்றுத் தர இயலவில்லை என்ற வருத்தம். என் அண்ணன் சக்ரபாணிக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரு குழந்தையைக் கூட கொடுக்க மனசில்லையே என்று மனதில் இருந்தவற்றைக் கொட்டியிருக்கிறார்.

அஜீத் வீட்டு முன் கத்தி அழுத ஆதிக் ரவிச்சந்திரன்.. AK-வோட அடுத்த படத்துக்கு பின்னால இப்படி ஒரு சம்பவமா?

மேலும் “ஜானகி என் ஜாதகத்தை பல முன்னனி ஜோசியர்களிடம் காட்டிய போது இந்த ஜாதகம் பலதாரம் கொண்ட ஜாதகம். பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பாரு. ஆனால் யாராலும் அவருக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கின்றனர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பெயர் வைத்த எனக்கு ஓர் இரத்த உறவு இல்லையே” என்று ஆரூர் தாஸிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

மேலும் மக்கள் திலகம் கூறிய அந்த இரண்டாவது மனக்குறை கல்வி. பள்ளிப் படிப்பைக் கூட சரியாகத் தாண்டாமல் வறுமை காரணமாக நாடகத்திற்கு வந்து தன் பசியைப் போக்கியவர் எம்.ஜி.ஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.