அஜீத் வீட்டு முன் கத்தி அழுத ஆதிக் ரவிச்சந்திரன்.. AK-வோட அடுத்த படத்துக்கு பின்னால இப்படி ஒரு சம்பவமா?

சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தானாக முயற்சி செய்து இன்று தென்னிந்தியாவில் முன்னனி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். அமராவதி படத்தில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் ஆசை, காதல் கோட்டை என அவரை காதல் மன்னனாக சினிமாவில் வலம் வரச் செய்தது. அதன்பின் 2000 ஆண்டுகளில் வெளியான தீனா படம் அவரின் இமேஜையே மாற்றியது. தொடர்ந்து அவர் நடித்த அமர்க்களம், சிட்டிசன், அட்டகாசம் போன்ற படங்கள் அவரை கமர்ஷியல் நாயனாக உச்சத்தில் வைத்தது.

தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வரும் அஜீத்தின் அடுத்த படத்தினை இயக்கப் போவது யார் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் GOOD, BAD, UGLY படத்தின் டைட்டில் வெளியாகி அஜீத் ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தியது.

இதில் என்னவொரு சிறப்பம்சம் என்றால் யார் இயக்குநர் என்று பலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரனின் பெயர் அதில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

வைரலாகும் ஜாக்கிசான் புகைப்படம்.. ஆளே மாறிப்போன அதிரடி மன்னன்

ஏற்கனவே சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்ற படமும், விஷாலை வைத்து மார்க் ஆண்டனியில் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜீத் ரசிகராம். தான் எந்தக் கதை எழுத ஆரம்பித்தாலும் அஜீத்தை மனதில் வைத்தே கதைகளை எழுதுவாராம். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் எப்படி கமல் ரசிகனாக அவரை வைத்து விக்ரம் படத்தினை எடுத்து மாஸ் வெற்றி கொடுத்தாரோ அதே போல் ஆதிக் ரவிச்சந்திரனும் தீவிர அஜீத் ரசிகராக அவருக்காக கதையை செதுக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஒருமுறை அஜீத் இனி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவிப்பு கொடுத்த போது அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆதிக் ரவிச்சந்திரன். தனது நண்பர்களுடன் அஜீத் வீட்டு முன்பாகச் சென்று கத்தி அழுதாராம்.

ஏனெனில் இனி அவரை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது என்ற காரணத்தினால் தன் ஹீரோவை இனி திரையில் மட்டும் தான் பார்க்க முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு இன்று அவரையே வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்று.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.