29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!

அந்தக் காலத்தில் படிப்பறிவில்லாத மக்களிடம் தன்னுடைய எளிமையான கருத்துக்களாலும், எழுத்து நடையாலும் மக்களிடம் அறிவின்மையை அகற்றி அறிவொளி பெறச் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிற்றூரில் பிறந்த கல்யாண சுந்தரம் இளம்வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார்.

புரட்சிக் கவி பாரதிதாசனிடம் இன்னும் தமிழைக் கற்றுக் கொண்டு திரைப்படங்களில் எழுத ஆரம்பித்தார். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், திரையுலகில் பாடல்களாக இசைத்தார்.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவரா? 3500 சம்பளத்தில் ஆரம்பித்த வெற்றிப் பயணம்

அவரின் முதல் பாடல் 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்தில் வெளிவந்தது. பாசவலை திரைப்படத்தில் பாட்டெழுத இளைஞனான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு வாய்ப்பு தரப்படுகிறது. எம்.எஸ்.விஸ்வநாதன் மிகுந்த சந்தேகத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சந்தித்தோடு, இந்தப் பையனுக்கு சரியாக பாட்டெழுத வருமா, டியூன் கம்போஸ் ஆகுமா என்றெல்லாம் எம்.எஸ்.வி. தயங்க ஆன் தி ஸ்பாட்டில் மள மளவென பாடல்வரிகளை எழுதி எம்.எஸ்.வி.யை ஆச்சர்யப் பட வைத்தார் பட்டுக்கோட்டையார்.

ஆனாலும் வறுமை காரணமாக மாடு மேய்த்தல், இட்லி வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேலையைச் செய்தார். பின்னர் பாட்டாளி வர்க்கத்தினரின் கவிஞராகத் திகழ்ந்தார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்கள் அவரை எளிய மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க பெரிதும் உறுதுணையாக இருந்தன. திருடாதே பாப்பா திருடாதே.., தூங்காதே தம்பி தூங்காதே.., சின்னப் பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற பாடல்கள் மூலம் அடித்தட்டு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல கருத்துக்களைக் கொண்டு சேர்த்தார்.

அதனால் தான் எம்.ஜி.ஆர். “என் முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் யாரென்று தெரியாது. ஆனால் நான்காவது கால், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று தெரியும்”, என்று பாராட்டினார்.

இறுதியில் தன் 29-ம் வயதிலேயே இவ்வுலக வாழ்வுக்கு விடைகொடுத்துச் சென்றுவிட்டார் பட்டுக்கோட்டையார். இவர் இலக்கியத்தில் இயங்கியது 10 ஆண்டுகள்தான் என்றாலும் இவரின் பாடல்கள் எத்தனை நூற்றாண்டுகளானாலும் வரலாற்றில் இடம் பிடித்த பொக்கிஷங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...