காதலிலும் காமெடியிலும் அசத்திய ரஜினி.. முதலில் நடிக்க மறுத்து பின் ஹிட்டான வரலாறு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக உயர்ந்து இன்று இந்திய சினிமாவின் உச்ச நாயகனாகத் திகழ்கிறார். அவருடைய ஆரம்ப காலப் படங்களில் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்துவதற்காக பல போராட்டங்களையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து அதன்பின் நிலையான இடத்தினைப் பெற்றார்.

இவ்வாறு 1980களுக்குப் பிறகு சினிமாவில் நிலையான இடத்தினைப் பிடித்து மளமளவென வளர்ந்து வரும் வேளையில் பஞ்சு அருணாச்சலம் ரஜினிக்கு ஓர் கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் தான் தம்பிக்கு எந்த ஊரு. 1984-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ரஜினியின் முக்கியமான படங்களில் ஒன்றாகும். ஏனெனில் ரஜினி இந்தப்படத்தில் காதலிலும், காமெடியிலும் கலந்து நடித்து சூப்பர் ஹிட் படத்தினைக் கொடுத்திருப்பார். இந்தப் படத்தில் நடித்த போது ஆரம்பத்தில் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். எனினும் பஞ்சு அருணாச்சலத்தினை நம்பி இந்தக் கதையில் நடித்தாராம்.

இந்தக் படத்தில் சில காலம் நடித்துவிட்டு இந்தக் கதை தனக்கு செட் ஆகுமா என்று யோசித்துக் கொண்டிருக்க அப்போது பஞ்சு அருணாச்சலத்திடம் கதை குறித்துக் கேட்டுள்ளார். இந்நிலையில் பஞ்சு அருணாச்சலம் அவரிடம் இந்தப் படம் உங்களுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் நாயகன் அந்தஸ்தைக் கொடுக்கும். மேலும் இந்தப் படம் தோல்வியுற்றாலும் அது எனக்குத் தான் நஷ்டம். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. எனவே தைரியமாக நடியுங்கள் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

ஆயிரம் பொன்னாச்சே.. சொக்கா.. தருமியாக பிச்சு உதறிய நாகேஷ்-க்கு திருவிளையாடல் வெற்றி விழாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்..

அதன்பின் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் அதற்கு முன் தில்லுமுல்லு படத்திலும் தனக்கு காமெடி ஒர்க்அவுட் ஆகுமா என சந்தேகப்பட கே.பாலச்சந்தர் ரஜினியின் மற்றொரு நடிப்பினை வெளிக் கொணர்ந்தார். அதே வகையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தை ராஜசேகர் இயக்க, பஞ்சு அருணாச்சலம் கதை, வசனம் எழுதி தயாரித்தார்.

இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சிகளால் ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்றன. மேலும் படத்தில் இடம்பெற்ற காதலின் தீபம் ஒன்று பாடலும்.. காதலர்களிடம் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் பாடலாக விளங்குகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...