சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தோற்றுப்போன மக்கள் திலகம் எம்ஜிஆர்! அப்படி என்ன நடந்திருக்கும்?

1984 ஆம் வருடம் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு பிரபலத்தின் உச்சியில் இருந்தார். அப்பொழுது தூயவன் எனும் தயாரிப்பாளர் ரஜினியிடம் தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்திற்கு அன்புள்ள ரஜினிகாந்த் என டைட்டில் வைத்திருப்பதாகவும் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். படத்தின் கதையைக் கேட்ட ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போக உடனே அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வாங்க மறுத்தும் விட்டார் ரஜினி.

அதே நேரத்தில் ரஜினி நடித்து வரும் ஒரு படத்திற்கு மட்டும் 20 லட்சம் வரை சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் சம்மதத்துடன் கே நடராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அம்பிகா நடிப்பில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் உருவானது. அந்த காலத்தில் திரைப்படங்களுக்கு வரி விளக்கு அளிக்கும் சட்டம் இருந்தது. அதாவது தமிழக அரசு விரும்பினால் எந்த படத்திற்கும் வேண்டுமானாலும் வரி விளக்கு அளிக்கலாம். அப்படி வரி விளக்கு கொடுக்கப்படும் படங்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தூயவன் முதல்வர் எம்ஜிஆரை நேரில் சந்தித்து தான் படம் ஒன்றை எடுத்து இருப்பதாகவும் அதற்கு வரி விளக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உடனே படத்தின் பெயர் என்ன என கேட்டிருக்கிறார் எம்ஜிஆர். அன்புள்ள ரஜினிகாந்த் என டைட்டிலை கூறி இருக்கிறார் தயாரிப்பாளர். சற்று சிந்தித்த எம் ஜி ஆர் வரி விலக்கு அளிப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் படத்தின் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த்திற்கு பதிலாக அன்புள்ள அசோக் குமார் என்றோ அன்புள்ள ராஜ்குமார் என்றோ மாற்றினால் வரிவிலக்கு அளிக்கலாம் என கூறினார். இதைக் கேட்ட தயாரிப்பாளர் தூயவன் தான் ரஜினியிடம் கலந்தாலோசித்து பெயரை மாற்றிக் கொள்வதாக கூறிவிட்டு கிளம்பினார். மறுநாள் ரஜினியை சந்தித்த தூயவன் 100 ரூபாய் நோட்டுக்களாக இரண்டு நோட்டுகளை ரஜினியின் முன் நீட்டியுள்ளார். எதுவும் பேசாமல் ரஜினிகாந்த் அதில் இருந்து ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி தொகையை தூயவனிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!

அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் தூயவன் அப்படியே நின்றுள்ளார். ஏன், எதற்கு என ரஜினி கேட்க தயாரிப்பாளர் தூயவன் எம்.ஜி.ஆரை சந்தித்ததும் அதன் பின் நடந்த நிகழ்வுகளை ரஜினியிடம் கூறினார். படத்தின் பெயரை மாற்றினால் மட்டுமே இந்த படத்திற்கு 7 லட்சம் வரை வரி விளக்கு கிடைக்கும் என தூயவன் ரஜினியிடம் கூறினார். சற்றும் தாமதிக்காமல் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் தூயவனிடம் படத்தின் டைட்டில் அன்புள்ள ரஜினிகாந்த் தான் இதில் எந்த மாற்றமும் இல்லை. வரி விளக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை படத்தை வெளியிடுங்கள். இதில் நஷ்டம் ஏற்பட்டால் இன்னொரு படத்தை இலவசமாக நானே நடித்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அதன் பின் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தன்னை எதிர்த்தவர்களை நிலை குலைய வைத்தவர் தான் எம்ஜிஆர் என்பதற்கு பல சான்றுகள் இருந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் சினிமாவில் தோற்றுப் போனது ரஜினியிடம் மட்டும்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.