கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக நடிகர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூண்டுக்கிளி திரைப்படத்திற்கான கதையை தயார் செய்து விட்டு கதைக்கு ஏற்ற ஹீரோக்களை தேர்வு செய்யும் நேரம் இயக்குனர் ராமண்ணாவிற்கு வந்தது. இந்த படத்தில் இரண்டு ஹீரோ கேரக்டர் மற்றும் டி ஆர் ராஜகுமாரியும் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி பெரிய மார்க்கெட்டை வைத்திருந்த பிரபல ஹீரோ. சிவாஜியை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என விருப்பப்பட்டு இயக்குனர் ராமண்ணாவின் சகோதரி நடிகை ராஜகுமாரி தொலைபேசி மூலமாக சிவாஜியை தொடர்பு கொண்டார். நடிகர் திலகம் சிவாஜி வீட்டிற்கு அழைப்பு வருகிறது சிவாஜியும் பேசுகிறார். உடனே ராஜகுமாரி என் தம்பி ராமண்ணா உங்களிடம் பட விஷயமாக பேச வேண்டும்,எப்பொழுது நேரம் கிடைக்கும் என சிவாஜி இடம் என கேட்கிறார். பிரபல நடிகை ராஜகுமாரியே தன்னிடம் நேரில் வந்து விருப்பப்பட்டு கேட்டது நடிகர் சிவாஜிக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த நேரத்தில் நடிகை ராஜகுமாரி சிவாஜியின் கால்ஷீட் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

நடிகர் சிவாஜி அந்த சமயம் மிக பிசியாக இருந்தாலும் ராஜகுமாரியின் வார்த்தையை தட்ட முடியவில்லை. நீங்கள் தேடி வந்ததால் இப்போது இது தயாரிப்பாளர், நடிகர்கள் உறவு தான். நாமெல்லாம் ஒரே கலை குடும்பம் என்னும் உணர்வு வர வேண்டும் என்பதால் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என கூறினார். இந்த பதிலை பிரபல நடிகை ராஜகுமாரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் சிவாஜி அப்பொழுது பல படங்களில் ஒன்றாக நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார். ஆனால் கொஞ்சம் கூட தலைக்கனமும் கர்வமும் இல்லாமல் தன்மையாக பேசியது இயக்குனர் ராமண்ணாவிற்கும் நடிகை ராஜகுமாரிக்கும் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தி இருந்தது. அடுத்த நாளே நடிகர் சிவாஜியின் மிக ஆர்வத்துடன் ராமண்ணாவின் ஆர்ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு சென்றார்.

உடனே இயக்குனர் ராமண்ணா நடிகர் திலகம் சிவாஜி இடம் கூண்டுக்கிளி திரைப்படத்தின் கதை பற்றியும், காட்சிகள் குறித்தும் பல விஷயங்களை கூறியிருந்தார். அதை தொடர்ந்து இந்த படத்தில் உங்களுடன் நடிகர் எம்ஜிஆரும் சேர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். உடனே சிவாஜியும் நாங்கள் இரண்டு பெரிய நடிகர்கள் சேர்ந்து ஒரே படத்தில் நடித்து அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் சினிமா உலகிற்கு இது ஒரு சாதனையாக அமையும் எனக் கூறினார். தைரியமாக இந்த கதையை படமாக எடுங்கள் நான் நடித்துக் கொடுக்கிறேன் என சிவாஜி வாக்குறுதி கொடுத்தார்.

அடுத்தடுத்து சொதப்பிய சரோஜாதேவி! சூப்பர் ஐடியா செய்து காப்பாற்றிய சிவாஜி!

அதன் பின் இந்த படத்தில் நடிப்பதற்கு முன் பணம் எவ்வளவு வேண்டும் என சிவாஜி இடம் ராம் அண்ணா கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சிவாஜி அமைதி காக்க வெள்ளி நாணயங்களை முன்பணமாக கொடுத்து சிவாஜியை படத்திற்காக முன்பதிவு செய்து கொண்டார் ராமண்ணா. கூண்டுக்கிளி திரைப்படத்தில் ஆண்டி ஹீரோ சிவாஜி. நடிகர் திலகம் சிவாஜி முன்னணி ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் ஒரு ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பிரபலத்தின் உச்சியில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். ஆனால் சிவாஜி எந்தவித தயக்கமும் இல்லாமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதிலேயே மிக கவனமாக இருந்தார்.

இந்த படத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உடன் இணைந்து ஜி ஆர் ராஜகுமாரி நடிப்பதாக இருந்தது அதன் பின் சில காரணங்களினால் நடிக்க முடியாமல் போனது. இந்த படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடித்த எம்ஜிஆருக்கும் இயக்குனர் ராமண்ணா ஒரே சம்பளத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இரண்டு பெரிய நடிகர்களுக்கும் தலா 25 ரூபாயை சம்பளமாக வழங்கப்பட்டது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...