அடுத்தடுத்து சொதப்பிய சரோஜாதேவி! சூப்பர் ஐடியா செய்து காப்பாற்றிய சிவாஜி!

தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஒருவர் லட்சுமி. அவர் எழுதிய மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று பெண் மனம். இந்த கதை தான் இருவர் உள்ளம் எனும் தலைப்பில் படமாக வெளியானது. சிவாஜி மற்றும் சரோஜாதேவி நடிப்பில் உருவான இந்த படத்தை இயக்கி தயாரித்தவர் எல் வி பிரசாந்த். சரோஜாதேவி பெரும்பாலும் நடித்து வந்த வழக்கமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆக இந்த திரைப்படம் இல்லாமல் சற்று கடினமான முக பாவனைகளை வெளிப்படுத்தும் படம் ஆக இருவர் உள்ளம் திரைப்படம் அமைந்திருந்தது.

படத்தில் பணக்கார வாலிபனாக நடித்து வரும் சிவாஜி நடிகை சரோஜா தேவியை ஒருதலையாக காதலித்து வருவார். தன்னுடைய பண அந்தஸ்தை காரணம் காட்டி சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்வார். ஆனால் இந்த திருமணத்தில் சரோஜாதேவிக்கு விருப்பம் இருக்காது. இந்த சூழ்நிலையில் நடிகர் சிவாஜியை பார்த்து சரோஜாதேவி ஒரு வசனத்தை கூற வேண்டும். அந்த வசனம் தான் நீ படிப்பில் மேதையாக இருக்கலாம், பணத்தில் குபேரனாக இருக்கலாம், அழகில் மன்மதனாக இருக்கலாம் ஆனால் கண்ணியம் என்பது உன்னிடம் இல்லை என்ற இந்த டயலாக். நடிகை சரோஜாதேவிக்கு இந்த காட்சி படமாக்கப்படும் பொழுது சரியாக நடிக்க வரவில்லை.

அந்த நேரத்தில் தான் இயக்குனர் எல் வி பிரசாந்த் சுக்ரால் எனும் ஹிந்தி திரைப்படத்தை எடுத்திருந்தார். சரோஜாதேவி நடித்த அந்த படம் 40 வாரத்திற்கு மேலாக திரையரங்குகளில் ஓடி மிகப் பெரிய வசூல் சாதனை செய்திருந்தது. அப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கதாநாயகி இந்த காட்சியில் சரியாக நடிக்காமல் மீண்டும் மீண்டும் டேக் எடுத்து காட்சியை சொதப்புவது இயக்குனர் எல் வி பிரசாந்திற்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இருவர் உள்ளம் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. இந்த திரைப்படம் சமூக கருத்தை கொண்டிருப்பதால் மிக எளிமையாக வசனங்களை எழுதி இருப்பார். ஆனால் அதை பேசுவதற்கு கூட நடிகை சரோஜாதேவி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

காட்சியை மீண்டும் மீண்டும் படமாக்கப்படுவதால் சரோஜாதேவிக்கு படப்பிடிப்பின் பொழுது அழுகையே வந்து விட்டது. சரோஜா தேவியை பார்த்த சிவாஜிக்கும் ஒரு பதட்டம் ஏற்பட்டு விட்டது. உடனே ஹீரோயின் சரோஜாதேவியை காப்பாற்றுவதற்காக நடிகர் சிவாஜி ஒரு உதவி செய்துள்ளார்.

படப்பிடிப்பில் அவமானப்படுத்திய நடிகை! பல வருடங்கள் கழித்து பழிவாங்கிய எம்ஜிஆர்!

யாருப்பா அது லைட் சரியில்ல சரி பண்ணுங்க. சரோஜாதேவி இந்த வசனத்தை சரியாகத்தான் கூறுகிறார். இந்த காட்சியை மீண்டும் மீண்டும் எடுப்பதற்கு சரோஜாதேவி காரணம் அல்ல, அதற்கு டெக்னிக்கல் மிஸ்டேக் தான் காரணம். இந்த முறை அழகாக வசனத்தை கூறிவிடு என சரோஜாதேவிக்கு நடிகர் சிவாஜி உற்சாகமளித்துள்ளார். அதன் பின் சரோஜாதேவிக்கு ஒரு மன தைரியம் கிடைக்க அடுத்த படப்பிடிப்பில் வசனத்தை சிறப்பாக கூறி காட்சியை பதிவாக்கினார்.

அந்த காட்சியும் மிகச் சிறப்பாக வந்தது நடிகை சரோஜாதேவி நடிகர் சிவாஜி இடம் தப்பு என் மேல் ஏன் டெக்னீசியன் மேல் பழி போட்டீங்க என கேட்டுள்ளார். நீதான் அலு மூஞ்சின்னு எனக்கு தெரியுமே நானும் சேர்ந்து உன்னை திட்டினால் இந்த காட்சியை என்று படமாக்குவது எனக் கூறினார். அதை அடுத்து இயக்குனர் பிரசாந்த் நடிகர் சிவாஜியை அழைத்து நீங்கள் மிகச் சிறப்பான நடிகர் என எனக்கு தெரியும். நீங்கள் நடித்தால் மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த காட்சியில் நீங்கள் நடித்தால் சரோஜா தேவியின் நடிப்பு வீணாகிவிடும். அதனால் நீங்கள் எந்தவித பதிலும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் அப்படி நடித்தால் மட்டுமே காட்சி எடுபடும் எனக் கூறினார். இயக்குனர் கூறியபடி சிவாஜி கணேசன் பேசாமல் அமைதியாக நடிக்க நடிகை சரோஜாதேவி சிறப்பாக நடித்து காட்சியும் வெற்றி பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.