மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு 12 வது இடத்தில் இருப்பதால் சுப விரயங்கள் ஏற்படும், ரிஷபத்தில் செவ்வாய் இருப்பதால் ஆரோக்கியம் ரீதியாக கடந்த மாதங்களில் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள்.

செவ்வாய் பகவான் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவார். சுக்கிரன் – சூரியன் சேர்க்கை இருப்பதால் நற்பலன்கள் கிடைக்கப் பெறும். சனி பகவான் உச்சமடைந்து வக்கிரம் அடைவார்.

வேலை மாற்றம், தொழில் அபிவிருத்தி, புதிய தொழில் துவங்குதல் என எந்தவொரு புதிய முயற்சியினையும் செய்ய வேண்டாம். பெரிய மாற்றங்களுக்கு உகந்த மாதமாக நிச்சயம் இது இருக்காது திருமண சார்ந்த காரியங்கள்

செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருப்பதால் வீடு, மனை வாங்குதல் வண்டி, வாகனம் வாங்குதல் போன்றவற்றிற்கு உகந்த மாதமாக இருக்கும். மேலும் பூர்விகச் சொத்துகள் ரீதியாக பாகப் பிரிவினை செய்யக் காத்திருந்தவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெறும்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்புகள் துவங்குவதற்கு ஏற்ற காலகட்டமாகும். கணவன் – மனைவி இடையே மனக் கசப்புகள் ஏற்படும், ஆனால் அது தானாகவே சரியாகிவிடும்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் வரன்கள் அமையப் பெறும். குழந்தை பாக்கியம் குறித்து எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் இருப்பதால் செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் சாதகமான பலன்களைக் கிடைக்கும்.

6 இல் புதன் இருப்பதால் குழந்தைகள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.