மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. இனி எல்லாமே சிறப்பு தான்!

Mesham Guru Peyarchi 2024: மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு 9 ஆம் வீட்டுக்கும் 12-ஆம் வீட்டிற்கும் அதிபதியாக இருப்பவர் குரு. பொதுவாக மேஷம் ராசி அன்பர்கள் எந்த செயலிலும் ஆர்வமாக ஈடுபடுபவர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அதிகம் அன்பு காட்டுபவர்களாக இருப்பார்கள். அதேபோன்று புதிதாக கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்.

இவ்வளவு காலம் மேஷம் ராசிக்கு ஜென்ம குருவாக குரு பகவான் இருந்தார். இந்த காலத்தில் தடை தாமதங்கள் குடும்பத்தினர் இடையே பிரச்சனை போன்றவை இருந்திருக்கும். ஆனால் இப்போது குரு தன ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார்.

இதன் மூலம் ஏற்கனவே நீங்கள் செய்திருக்கும் முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். படிப்பதற்காகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களுக்கு இந்த காலத்தில் வாய்ப்புகள் கைக்கூடும்.

தொழில் வளர்ச்சிகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் சுப செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நடக்கும்.

குருவின் பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும். இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு அஷ்டம ஸ்தானத்தை நேர் பார்வையாக பார்க்கிறார். இதனால் மனக்கஷ்டங்கள் தீரும். அதேபோன்று காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.

குருவின் பார்வை ஆறாம் இடத்தில் விழும்போது கடன் சுமைகள் குறையும். உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பத்தாம் இடத்தை பார்க்கும் போது தொழிலில் வளர்ச்சி இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.

அதேநேரம் சில இடங்களில் மேஷ ராசி அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலின் போது கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்காக ஒப்புதல் வழங்க வேண்டாம். கூடுதல் பலன்களைப் பெற துர்கா தேவியை வணங்கி வருவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews