மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!

ரஜினிக்கு பில்லா, கமலுக்கு வாழ்வே மாயம், சட்டம் உள்பட பல மெஹா ஹிட் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர் என்றார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உதாரணமாகத் திகழ்ந்தவர் நடிகர் பாலாஜி. ஒரு சாதாரண மனிதன் முயன்றால் சிகரத்தைத் தொடலாம் என்பதற்கு நடிகர் பாலாஜி ஒரு நல்ல உதாரணம்.

சென்னை கிண்டியில் “நரசு ஸ்டுடியோவில்” தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்த பாலாஜி நடிப்பின் மீது கொண்ட ஆசையால் ஜெமினி ஸ்டுடியோ வாசனை சந்தித்து நடிக்க சந்தர்ப்பம் கேட்டார். பாலாஜி முதன்முதலாக 1951ல் “ஔவையார்” படத்தில் “முருகன்” வேடத்தில் நடித்தார். பின்னர் படிப்படியாக சகோதரி, போலீஸ்காரன் மகள்,படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.

பின்னர் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வர கதாநாயகனாக, வில்லனாக, குணச் சித்திர நடிகராக படத் தயாரிப்பாளராக, தமிழ்த் திரையுலகில் இன்றைய விஜய் சேதுபதி போல் அக்காலத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறந்து விளங்கினார். 1958ல்மனமுள்ள மறுதாரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

நடிப்பில் சிகரம் தொடாத அவருக்கு சினிமா தயாரிப்பு கை கூடியது. பாலாஜி “சுஜாதா சினி ஆர்ட்ஸ்” என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் “அண்ணாவின் ஆசை” என்று தன் முதன் முதல் படத்தை தயாரித்தார். இதில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார்.

கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதான்

பிறகு சிவாஜி கணேசனை வைத்து தங்கை, என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி, என் மகன், உனக்காக நான், தீபம், தியாகம், நல்லதொரு குடும்பம் உள்பட பதினேழு திரைப்படங்களைத் தயாரித்தார். இதன் மூலம் நடிகர் திலகத்தை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் இந்தி,தெலுங்கு,மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டார். கமல் ,ரஜினிகாந்த் ,ஜெய்சங்கர் இவர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார் பாலாஜி. இவரின் தயாரிப்பில் உருவான “பில்லா” படம் ஒரு வசூல் சாதனைப் படம்.

நாகேஷ் சிறந்த நண்பரான பாலாஜி ஆரம்பத்தில் அவரை தன் வீட்டில் தங்கவைத்து எல்லா உதவிகளையும் செய்தார். இவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால் பிரமாண்டமாக இருந்ததால் பிரமாதமாக இருந்ததால் எல்லோரும் அவர் தயாரித்த படங்களின் ரசிகர்களாக இருந்தார்கள்.

படத் தயாரிப்பை துவக்கும்போதே அதன் ரிலீஸ் தேதியையும் முடிவு செய்து இவரின் வழக்கம். பெரும்பாலும் தன் திரைப்படங்களை ஜனவரி 26ம் தேதியன்று தன் படங்களைத் திரையிடுவார்.. ஏனெனில் அன்று இவரது திருமணநாள்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,சங்கர் கணேஷ், இளையராஜா ,கங்கை அமரன் என்று பல இசையமைப்பாளர்களை தன் படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். பாலாஜி எம்ஜிஆருக்கு நெருங்கிய நண்பர், ஆனால் அவரை வைத்து படம் எடுத்ததில்லை.தைப் பொங்கலன்று எம்ஜிஆர் தோட்டத்தில் வரிசையில் முதல் ஆளாக நின்று அவரிடம் “ஆசி” பெறுவது வழக்கம். எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே சொல்வார் … “பாரு இவன் என்கிட்ட காசு வாங்கறான். ஆனால் என்னை வைத்து படம் எடுக்கமாட்டான்“ என்று.

அதற்கு பாலாஜி சொல்வாராம் “அண்ணே.. உங்ககிட்ட காசு வாங்கினா அந்த வருஷம் பல லட்சங்கள் சம்பாதிப்பேன்“ என்று. எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் எம்.ஜி.ஆரின் கைராசிக்காக அவரிடம் பாலாஜி பெறும் சிறிய தொகையே அவர் மனதுக்கு திருப்தியாக இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews