இயக்குநர் ஷங்கர் முதன்முதலாக எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்தது எப்படி தெரியுமா?

இன்று இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராகக் கருதப்படும் இயக்குநர் ஷங்கர், ஆரம்பத்தில் பட்ஜெட் படங்களை எடுத்து அதில் வெற்றியைக் கொடுத்த தளபதி விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் உதவியாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குநர் ஷங்கர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் முதன் முதலாக எப்படி உதவி இயக்குநராக இணைந்தார் தெரியுமா?

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குநர்களில் முதன்மையானவராக விளங்கியவர் இயக்குநர் செந்தில்நாதன். பூந்தோட்ட காவல்காரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை எடுத்தவர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இவர்தான் பி.ஏ., உதவி இயக்குநர் என அனைத்துமாய் இருந்திருக்கிறார். ஒருமுறை எஸ்.ஏ.சந்திரசேகரின் நண்பர் தில்லைராஜ் என்பவர் தான் இயற்றிய நாடகத்தினைக் காண எஸ்.ஏ.சந்திரசேகரை சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு அழைத்திருக்கிறார்.

அப்போது அந்த நாடகத்தினைக் காணச் சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த நாடகத்தைப் பார்த்து முடித்ததும் காமெடிக் காட்சியை மிகவும் ரசித்திருக்கிறார். அடிப்படையாகவே எஸ்.ஏ. சந்திரசேகர் புரட்சி, போலீஸ், சட்டம், போராட்டம் என புரட்சி படங்களையே எடுத்தததால் காமெடி ஏரியாவில் அவர் கொஞ்சம் வீக்காக இருந்திருக்கிறார்.

எனவே தனது உதவியாளர் செந்தில்நாதனிடம் இந்த காமெடிக் காட்சிகளை யார் எழுதியது என்று கேட்டு அவர் முகவரியை வாங்கி வா என்று கூற, தில்லைராஜின் அந்த நாடகத்திற்கு காமெடி எழுதிய ஷங்கரின் முகவரியைக் கொடுத்திருக்கின்றனர்.
அதன்பின் நாட்கள் சென்றது. இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரேசேகர் தனது அடுத்தபடமான வசந்த ராகம் திரைப்படத்தை இயக்க தயாராகிறார்.

சொதப்பிய இயக்குநர்.. சோடைபோன கேப்டன் படம்.. அதன்பின் நடந்த மேஜிக்கால் சூப்பர் டூப்பர் ஹிட்டான வரலாறு..

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவரது மனைவி ஷோபா. கதையும் அவருடையதே. கேப்டன் விஜயகாந்த், சுதா சந்திரன், ரகுமான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகளை எழுதுவதற்கு அப்போது இயக்குநர் ஷங்கரை அணுகியிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து எஸ்.ஏ.சி -யை சந்தித்த ஷங்கர் உதவியாளராக சேர விருப்பம் தெரிவிக்க, அவரோ செந்தில்நாதன் தான் அனைத்துமே. அவரிடம் கேட்டுக் கொள் என்று கூறியிருக்கிறார். பின் செந்தில்நாதன் முதன் முதலாக அந்தப் படத்திற்கு இயக்குநர் ஷங்கருக்கு கிளாப் அடிக்கும் வேலையை கொடுத்திருக்கிறார்.

மேலும் வசந்த ராகம் படத்தில் கோவைசரளா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த காமெடிக் காட்சிகளையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார்.

இப்படித்தான் இயக்குநர் ஷங்கரின் சினிமா அத்யாயம் தொடங்கியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...