மீனம் தை மாத ராசி பலன் 2023!

சனி பகவான் 2ஆம் இடத்தில் இருந்து விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படும், இதனால் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒருபுறமும், செலவினங்களைக் குறைக்க முடியாமல் மற்றொருபுறமும் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே மனச் சங்கடங்கள் ஏற்படும்.  குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படும். மருத்துவரீதியான விரயச் செலவுகள் ஏற்படும்.

வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். உடன் பிறப்புகளுடன் மனப் பூசல்கள் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில்துறையினைப் பொறுத்தவரை புதிதாகத் தொழில் எதையும் துவங்காதீர்கள்; இல்லையேல் நஷ்டம் ஏற்படும்.

கடனை முடிந்தளவு வாங்காமல் தவிர்த்தல் நல்லது. குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை வந்து சேரும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும்.

குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்போருக்கு நற் செய்தி தேடிவரும். வேலைவாய்ப்புரீதியாக புதிதாக வேலை தேடுவோருக்கு குறைந்த சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கப் பெறும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் விஷயங்கள் எதிலும் தலையிடாமல் இருத்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.