பா.ரஞ்சித் வரிசையில் ஓடிடி-க்குத் தாவிய மாரி செல்வராஜ்.. அடுத்த பட ஹீரோ யாரு தெரியுமா?

உணர்வுப் பூர்வ படங்களின் நாயகன் இயக்குநர் ராமின் மாணவராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் மாரி செல்வராஜ். முதல் படமே சாதி கொடுமைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றியதால் கவனிக்க வைத்து பாராட்டுதலைப் பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் கர்ணன் படத்தில் தனுஷுடன் சேர எதிர்பார்ப்பு அதிகரித்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தனுஷுடம் அபார நடிப்பை வாங்கி மீண்டும் இயக்கத்தில் முத்திரை பதித்தார்.

அதைத் தொடரந்து மாமன்னன் படத்தில் வடிவேலு, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து தரமான படைப்பினைத் தந்தார். இப்படி ஒவ்வொரு படமும் அவருக்கு முத்துக்களாக அமைய அடுத்த படம்என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து வாழை என்ற தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் மாரி செல்வராஜ்.

கலையரசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சிறுவர்கள் பலரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் தான் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் இப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்.

நடிப்புக்கு குட் பை சொல்லப் போகிறாரா அதிதி ஷங்கர்? : வெளியான வைரல் புகைப்படம்

தற்போது வாழை படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏனெனில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படமும் ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஆனால் வெகு நாட்களுக்குப் பிறகே தனது வெற்றியைப் பதிவு செய்தது. இதனால் வாழை படமும் நன்றாக இருந்து மிகத் தாமதமான வெற்றியைப் பதிவு செய்யுமோ என ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

இப்படத்தையடுத்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமைக் கதாநாயகனாகக் கொண்டு தனது அடுத்த படத்தை இயக்குகிறார். இப்படம் கபடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் படமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...