தளபதி எஸ்கேப்… ஆனால் தல நிலைமைதான் என்னவோ… நேக்கா திட்டப்போடும் திரையுலகம்…

அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் வாலி, பில்லா, விஸ்வாசம் போன்ற பல திரைப்படங்களின் மூலம் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம்தான் விடாமுயற்சி. இப்படத்தின் படபிடிப்புகள் தற்போது அசர்பெய்ஜானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிக்ர் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வேளியாகியுள்ளன.

விஜய்யை போல அஜித்திற்கு மிரட்டலான கதை வைத்திருக்கும் இயக்குனர் அட்லீ!

என்னதான் சினிமா நடிகராக இருந்தாலும் அஜித்குமார் சாதாரண நடிகர்களிலிருந்து சற்று வித்தியாசமானவரே. இவர் பொதுவாக எந்தவொரு விளாம்பரங்களுக்கும் ஆசை படாதவர். மேலும் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார்.

பத்திரிக்கையாளர்கள், தனது ரசிகர்கள் என எவரையும் சந்திப்பதில்லை. இப்படி பொது விஷயங்களை தவிர்த்து வரும் அஜித்குமாருக்கு தற்போது ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.

கையில் காசில்லாமல் தவித்த எம்.ஜி.ஆர்… அப்படியும் வாரி வழங்கிய வள்ளல்… எப்படி தெரியுமா?

இந்நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஆனால் அஜித் விஜய் இதில் கலந்து கொள்வார்களா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஆனால் தற்போது அஜித் விஜய் இருவருமே வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் இவர்கள் இந்நிகழ்ச்சியை தவிர்த்து விட இது ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் பேச்சு நடமாடுகின்றது. ஆனால் அஜித்தை இந்நிகழ்ச்சிக்கு வரவைக்க திரையுலகம் சார்பில் பல வேலைகளும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பல ஆண்டுகளாய் இப்படிபட்ட நிகழ்சிகளில் கலந்து கொள்ளாத அஜித் குமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் துப்பாக்கி பட மாஸ் வில்லன்! ஏ. ஆர் முருகதாஸின் அதிரடி!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews