மலையாள பிளாக்பஸ்டர் படமான ‘பிரேமலு’ வின் இரண்டாம் பாகம் தயாராகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…

சமீப காலமாக மலையாள படங்கள் பிரபலமாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கு மேல் வசூலித்து வரும் திரைப்படம் ‘பிரேமலு’. ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு அதிகமாக பேசப்பட்ட திரைப்படம் ‘பிரேமலு’.

பிரேமலு சச்சின், நஸ்லென் மற்றும் ரீனு மற்றும் மமிதா நடித்த, காதல், நட்பு மற்றும் தொழில் உட்பட இளமைப் பருவத்தை வழிநடத்தும் கதையைச் சொல்கிறது. இரண்டு மலையாளிகள் தங்கள் தொழிலுக்காக ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்து, சந்தித்து, இறுதியில் காதலில் விழுவதை படம் காட்டுகிறது. அமல் டேவிஸ் என்ற அமுல் பேபியாக சங்கீத் பிரதாப், ஆதியாக ஷியாம் மோகன் மற்றும் தாமஸாக மேத்யூ தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர் மேலும் அவர்களின் நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றனர்.

இந்த திரைப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் தயாரித்து கிரிஷ் ஏ. டி இயக்கியிருந்தார். தற்போது வெற்றியடைந்த ‘பிரேமலு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்று பாவனா ஸ்டுடியோஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ‘பிரேமலு’ திரைப்படத்தை SS ராஜமௌலியின் மகனான SS கார்த்திகேயா டிஸ்ட்ரிபியூட் செய்திருந்தார். இந்நிலையில் SS கார்த்திகேயா தனது X தளத்தில் ‘பிரேமலு – 2’ திரைப்படத்தை தெலுங்கில் வழங்க போவது மகிழ்ச்சியாக உள்ளது மற்றும் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நன்றி என்று கூறி போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

சச்சின் மேற்படிப்புக்காக யுகே செல்வதும், ரீனு தனது தொழில் வாழ்க்கைக்காக ஹைதராபாத்தில் தங்குவதும் போன்று படம் முடிவடைகிறது, இருவரும் நீண்ட தூரம் வேலை செய்ய முடிவு செய்ததால், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் கதையை எப்படி தொடர்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘பிரேமலு – 2’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிறது. 2025 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...