கர்நாடக இசையில் ஆரம்பிக்கும் பாடலில் திடீரென புகுந்து கலக்கிய கிராமிய இசை.. அதான் ராஜாவின் ராஜாங்கம்..

இன்றும் பேருந்துகளிலும், கிராமங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் பாடல்களில் ஒன்றுதான் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்‘ என்ற பாடல். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திற்காக இளையராஜாவின் இசையில், கங்கை அமரனின் வரிகளில், மனோ-சித்ரா பாடிய கிராமத்துப் பாடல். இன்றளவும் இந்தப் பாடல் ஹிட் வரிசையில் இடம்பிடிக்கக் காரணம் பாடலில் இளையராஜா செய்துள்ள மேஜிக் தான். இந்தப் பாடலில் அப்படி என்ன விஷேசம் தெரியுமா?

மதுரைப் பின்னணியில் தெப்பக்குளத்தில் இந்தப் படமாக்கப்பட்டது. மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் கோபுரத்தை மட்டும் காட்டப்படும். கோவிலுக்குள்ள படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால். அதனால மேல் தளத்தில் போய் ஆடிப் பாடுவது போல் படமாக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பாடலை இளையராஜா மாயமாளவக்கௌளை என்ற ராகத்தில் அருமையாக இசை அமைத்திருப்பார். கர்நாடக இசையில் இது 15வது மேளகர்த்தா ராகம். முதன் முதலாக பாட்டு கற்றுக் கொள்ளப் போகிறவர்களுக்கு இந்த ராகம் தான் பயிற்றுவிக்கப்படும். இளையராஜா இந்தப்பாட்டில்  கர்நாடக சங்கீத ராகத்தை எடுத்து அதனுள்  கிராமியத்தனமான அழகான ராகத்தைப் பாடலாக கொடுத்திருப்பார்.

இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவர் எழுதியதா? யாரும் அறியாத பிரபல கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்

இதுமட்டுமின்றி பாடலின் ஆரம்பத்தில் வரும் தொகையறாவில் ஒரு பக்திப் பழக்கத்தையே கூறியிருப்பார் கங்கை அமரன். மாவிக்கு எடுக்கும் முறைபற்றி பச்சரிசி மாவு வச்சி, சர்க்கரையில் பாகு வச்சி, சுக்கு இடிச்சி, மிளகு இடிச்சி பக்குவமா கலந்து வச்சி அம்மனுக்கு மாவிளக்கு எடுக்க வந்தோம்… அம்மனவ எங்களையும் காக்க வேண்டும்… சாமி.. என்று அழகாக இந்த தொகையறா எழுதப்பட்டிருக்கும். அதற்கு இளையராஜாவும்  செனாய், ஸ்ட்ரிங்ஸ்னு இசைக் கருவிகளில் ஜாலம் காட்டியிருப்பார். மேலும் ஹம்மிங் ரொம்ப சிறப்பா இருக்கும்.

அடுத்ததாக வரும் பல்லவியில் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்.. என் ராசாத்தி உன்னுடைய நேசம். மானோட பார்வை, மீனோட சேரும். மாறாம என்னைத் தொட்டுப் பேசும். இது மறையாத என்னுடைய பாசம்.
2வது சரணத்தில் மனோவின் குரலில் ‘நீ தானே என்னுடைய ராகம்… என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம். ஏழேழு ஜென்மம் உன்னை பாடும். இது உன்னோட பாட்டுக்காரன் பாட்டு. என் மனசேதோ கிறங்குதடி… சிறகடிச்சி பறக்குதடி… என்று பாடும் போதும் பாடல் வரிகள் வெகு அழகாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் செல்லும். இப்படித்தான் ஒவ்வொரு பாடலும் அதன் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்து ஹிட் வரிசையில் சேர்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.