எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்… யார் சொல்றாங்கன்னு தெரியுதா? மாவீரனின் சஸ்பென்ஸ் தகர்ந்தது…!

சிவகார்த்திகேயன் என்றாலே குழந்தைகளுக்குப் பிடித்தமான ஹீரோ என்பது தான் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் அவரது ஹியூமர் மற்றும் மேனரிசம் தான். இவர் நடித்த பல படங்களில் ஒவ்வொரு காமெடியும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

டைமிங் காமெடியில் மனிதர் அசர அசர அடிப்பார் என்பது இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலேயே நமக்குத் தெரிந்து விடும். காமெடியும், ஆக்ஷனும் கலந்து கட்டி இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். அந்த வகையில் விரைவில் வெளியாகிறது மாவீரன்.

Maaveeran 2
Maaveeran 2

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் மாவீரன். பேரு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? அதாங்க… இது நம்ம சூப்பர்ஸ்டார் படத்தோட டைட்டில் தான். மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தோட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. யப்பா… என்ன ஒரு எடிட்டிங். டிரெய்லரே அப்ளாஸை அள்ளுது.

இந்தப் படத்தில் ஆக்ஷன் பிளஸ் காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்பது டிரெய்லரைப் பார்க்கும்போதே தெரிகிறது. அதே நேரம் எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் கற்பனைகளும் தெறிக்க விடும் என்பதும் தெரிகிறது.

சிவகார்த்திகேயனுக்கு என்ன கதாபாத்திரம் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. அவருடன் ஒரு அசரீரி வானில் இருந்து உரையாடுகிறது. இது யாருடைய குரல் என்பது தெரியாமல் இருந்தது. அது விஜய் சேதுபதியின் குரல் தான் என்பது தற்போதைய அப்டேட்.

சிவகார்த்திகேயன் அரசியல்வாதிகளைப் பார்த்துப் பயந்த நிலையில் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறார். ரஜினி, கமல், தனுஷ், சிலம்பரசன் என பல முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயனுடன் பேசுவதாகவும் ஒரு கிசுகிசு வலம் வருகிறது.

Maaveeran 3
Maaveeran 3

இந்தப் படம் வரும் ஜூலை 14ம் நாள் அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் அதிதி சங்கர், மிஸ்கின், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகத் தெரிகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...