ஐஸ்வர்யா ராயை பாட்டில் வம்புக்கு இழுத்த வைரமுத்து.. கவிஞருக்கு எவ்ளோ குசும்பு பார்த்தீங்களா?

பாரதிராஜா இயக்கத்தில் 1980-ல் வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு பாடலாசிரியராக அறிமுகமானவர் தான் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் படம் பெற்றி பெறவில்லையென்றாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தது.

மேலும் வைரமுத்துவும் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை எழுதினார். மேலும் கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக இலக்கியத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதினையும் பெற்றார். பல கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தென் தமிழகத்து வட்டாரச் சொற்களில் பாடல்கள் மற்றும் நூல்களை இயற்றி மண் மனம் சார்ந்த கவிஞராகவும் விளங்கி வருகிறார். இப்படி தமிழ் திரையிசைப் பாடல்களிலும், இலக்கியத்துறையிலும் ஓர் முன்னோடியாக விளங்கும் வைரமுத்து சிறந்த பாடல்களுக்காக 6 முறை தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.

கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்!

தான் எழுதும் பாடல்களில் இனிமைக்காக கவிஞர்கள் சில குறும்புத்தனங்களைச் செய்வது வழக்கம். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தான் எழுதிய ஒரு பாடலில் உலக அழகி ஐஸ்வர்யா ராயை வம்புக்கு இழுத்திருப்பார். அந்தப் பாடல் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற சந்தன தென்றலை பாடல். சங்கர் மகாதேவனின் அற்புத குரலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மயக்கும் இசையில் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கும் பாடல் இது. படத்தில் கதைப்படி உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அக்காவாக தபு நடித்திருப்பார். இவரை நினைத்து அஜீத் இந்தப் பாடலைப் பாடுவதாக அமைந்திருக்கும். இப்படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் பாடலுக்கான காட்சியைச் சொல்ல வைரமுத்து இவ்வாறு எழுதியிருப்பார். அந்தப் பாடலில் இடையில் சரணத்தில் வரும் வரிகளான..
பல உலக அழகிகள் கூடி
உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர்மலரே
இன்னும் தயக்கம் என்ன
என்னைப் புரியாதா
இது வாழ்வா சாவா..
என்று வரிகளை எழுதியிருப்பார். இதில் பல உலக அழகிகள் கூடி என்றவரிகளானது ஐஸ்வர்யாராயை மனதில் வைத்து உலக அழகியே உன் தங்கை என்றாலும் அவள்மேல் காதல் இல்லை என் காதல் உன்னோடுதான் என்று ஐஸ்வர்யா ராயை மறைமுகமாக கலாய்த்திருப்பார் வைரமுத்து.

அதற்கு சில வருடங்களுக்குப் முன்பு வெளியான ஜீன்ஸ் படத்தில் ‘அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்..’,  ‘சற்றே நிமிர்ந்தேன் தலைசொக்கிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி’ என ஐஸ்வர்யாராயை புகழ்ந்தும் வரிகள் எழுதியிருப்பார் வைரமுத்து.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...