இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு அர்த்தமா..! இளையராஜாவின் வாழ்க்கையை பாட்டிலேயே சொன்ன ‘காசி’

சியான் விக்ரம் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காசி. இதில் சேதுவிற்கு பின் மீண்டும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். படத்தில் இவருக்கு ஜோடியாக காவியா மாதவன், தங்கையாக காவேரி மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்ரமின் நடிப்பு திறனுக்கு சவால் விட்டு நடிக்க வைத்த படங்களில் காசிக்கு என்றுமே ஓர் தனி இடம் உண்டு.

முன்னணி ஹீரோக்கள் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய திறமையை சினிமா உலகில் பறைசாற்றியவர். ‘காசி’ படத்தைப் பொறுத்தவரை இன்றும் அதன் பாடல்கள் மனதைகே கரைய வைப்பவை. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் பாடகர் ஹரிஹரனே பாடி இருப்பார். இளையராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடல்களும் தனி ரகம்.

உதாரணமாக கவிஞர் கண்ணதாசன் தான் எழுதும் பாடல்களில், அவரின் வாழ்க்கை அனுபவங்களையே வரிகளாக்கி அதனை திரைப்படத்தில் பாடலாக எழுதி ஹிட் கொடுத்தார். கவிஞர் கண்ணதாசனை போலவே இளையராஜாவும் தனது வாழ்க்கை நிலையை ‘காசி’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தி இருப்பார்.

பழம்பெரும் இயக்குனருக்கு ராஜ்கிரண் சுட்டிக்காட்டிய தவறு… சிறிய மாற்றத்தால் பெரும் வெற்றி பெற்ற பத்ரகாளி திரைப்படம்

காசி படத்தில் இடம்பெற்ற ‘என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே..’ என்ற பாடல் அப்படியே இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை உணர்த்துவதாக அமைந்திருக்கும். இந்த பாடல் பற்றி இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது, கவிஞர் மு மேத்தாவிடம் தனது வாழ்க்கைபி பக்கங்களை ஒரு பாடலாக எழுதும்படி கேட்டிருக்கிறார். அதன்படி மு மேத்தாவும் இளையராஜாவின் வாழ்க்கை பக்கங்களை உணர்த்தும் வகையில் ‘என் மன வானில் சிறகை விரிக்கும்..’ என்ற பாடலை எஎழுதிக் கொடுத்தார்.

இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளான
‘இறைவனிடம் வரங்கள் கேட்டேன்.. ஸ்வரங்களை அவனே கொடுத்தான்..
மனிதரில் இதை யாரும் அறிவாரோ..
நான் பாடும் பாடல் எல்லாம்.. நான் பட்ட பாடே அன்றோ..
பூமியில் இதை யாரும் உணர்வாரோ..

போன்ற வரிகள் இளையராஜாவின் ஆரம்பகால இசை வாழ்க்கையை குறிப்பதாக அமைந்திருக்கும். அதற்கு அடுத்து இடம்பெற்ற வரிகளான ‘ராகம் உண்டு தாளம் உண்டு..
என்னை நானே தட்டிக் கொள்வேன்..
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேறென்ன வேண்டும்
என்று தனது இசையை பற்றி குறிப்பிட்டிருப்பார். மேலும் இதுபோன்று அக்னி நட்சத்திரம் படத்திலும் ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா..’ என்ற பாடலும் இசைஞானி இளையராஜாவின் பெருமையை கூறும் ஒரு பாடலாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
John

Recent Posts