ஏன் சொந்த புத்தியே கிடையாதா? அடுத்தவன் தட்டுல எதுக்கு சாப்பிடற? அனிருத்தை வெளுத்து வாங்கிய பிரபலம்!

கோலிவுட்டில் ஒரு ராக்ஸ்டார் ஆக வளர்ந்து கொண்டிருப்பவர் இசை அமைப்பாளர் அனிருத். 3 என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த அனிருத் தொடர்ந்து பல படங்களில் தனது புதுமையான இசையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்.

இளையராஜா, ஏ ஆர் ரகுமான் இவர்களுக்கு அடுத்தபடியாக அனிருத் தான் இப்போது இசையில் ராஜாவாக இருக்கிறார். எந்த ஒரு பெரிய நடிகர் படங்கள் என்றாலும் அதில் அனிருத்தின் இசை தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதில் இருந்து உலகம் எங்கிலும் தன்னை பிரபலமாக்கி கொண்டார் அனிருத். இந்த நிலையில் சமீப காலமாக கூலி படத்தில் தன் இசையை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக கூலி படத்தின் மீதும் லோகேஷ் கனகராஜ் மீதும் இளையராஜா புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இதைப்பற்றி பிரபல நடிகரும் இயக்குனருமான அனு மோகன் அவருடைய அனுமானத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது ஒரு படத்திற்கு கதை, பாடல் வரி என எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது இசை தான். அதனால் அந்த இசையை ஒருவர் அனுமதியின்றி பயன்படுத்துகிறார் என்றால் அந்த இசைக்கு சொந்தக்காரருக்கு கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்யும்.

அதுதான் இப்போது இளையராஜாவுக்கும் நடந்திருக்கிறது. ஒருவருக்கு சொந்தமான பொருளை அவர் அனுமதி இன்றி எடுக்கும்போது யாருக்குத்தான் கோபம் வராது? அதை அனிருத் செய்திருக்கிறார். ஏன் சொந்த கற்பனையே கிடையாதா?

புதியதாக பாடல் அமைத்து படத்திற்கு பயன்படுத்த வேண்டியது தானே? இப்பொழுது வருகிற எல்லா படங்களிலும் பழைய ஹிட் பாடல்களை ரீமேக் செய்துதான் பயன்படுத்தி வருகிறார்கள்.
சரி பயன்படுத்துவது இருக்கட்டும் .அதை அந்த இசைக்கு சொந்தக்காரரிடம் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டியது தானே?

என் இசையை பயன்படுத்தக் கூடாது என இளையராஜா சொல்லவில்லை. என் அனுமதி இன்றி பயன்படுத்த வேண்டாம் என்று தான் அவர் கூறி வருகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? அடுத்தவன் பொருளுக்கு ஏன் ஆசைப்படுகிறீர்கள்? என அனிருத்தை வெளுத்து வாங்கி இருக்கிறார் அனு மோகன்.

Published by
Staff

Recent Posts