ஒரு சிக்ஸ் கூட அடிக்கல.. சத்தமே இல்லாமல் ருத்துராஜ் செஞ்ச சம்பவம்.. கேப்டன் கேப்டன் தான்யா..

நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. மற்ற 9 அணிகளுக்கும் பிளே ஆப் வாய்ப்பு இருக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடையும் அணி, இரண்டாவதாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் எந்த அணியும் இனிமேல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதிலும் அடுத்தடுத்து பல டிவிஸ்ட்டுகள் அரங்கேறும் என்றும் தெரிகிறது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலமாக திகழும் நிலையில் இதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த இரண்டு இடங்களுக்கு கடுமையான போட்டி போட்டு வருகின்றனர்.

இதனால் லீக் சுற்றின் கடைசி போட்டிகள் களைகட்ட காத்துக்கொண்டிருக்க இந்த சீசன் முழுக்க முழுக்க சிக்ஸர்கள் சீசனாகவும் மாறி உள்ளது. சமீபத்தில் ஆயிரம் சிக்ஸர்களை ஐபிஎல் 2024 தொடர் கண்டிருந்த நிலையில் விரைவில் அதிக சிக்ஸர்களை எடுத்து கடந்த சீசனின் சாதனையையும் முறியடிப்பார்கள் என தெரிகிறது.

ஒவ்வொரு போட்டிகளிலும் சிக்ஸர்கள் அதிகம் அடிக்கப்பட்டு வரும் நிலையில் பல அணிகள் 200 ரன்களை மிக எளிதாகவும் இந்த சீசனில் கடந்து வருகிறது. முன்பெல்லாம் 200 ரன்களைத் தொட்டாலே அது மிகக் கடினமான இலக்காக இருக்கும் நிலையில் தற்போது 260 ரன்களை கொல்கத்தா அடித்தபோது கூட பஞ்சாப் அணி அதனை எட்டிப்பிடித்து அதிர்ச்சி அளித்திருந்தது.

இப்படி கடந்த 16 ஐபிஎல் சீசன்கள் பார்க்காத பல அரிய சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தான் மிக சைலண்டாக ஒரு அசாத்திய சம்பவத்தை செய்து முடித்துள்ளார் ருத்துராஜ். இந்த சீசனில் ஒரு சில பந்துகள் பேட்டிங் செய்யும் வீரர்களே சிக்ஸர்களை பறக்கவிட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருத்துராஜ் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 67 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராக அடித்திருந்தார்.

அப்படி இவர் அடித்த 67 ரன்களில் 9 ஃபோர்களை தான் அடித்திருந்தார். இந்த போட்டி நடந்து பல நாட்களானாலும் இதுவரை சிக்ஸர்களே அடிக்காமல் இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரராக ருத்துராஜ் தான் தொடர்ந்து.வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி 52 ரன்களுடனும், மூன்றாவது இடத்தில் தீபக் ஹூடா 50 ரன்களுடனும் உள்ளனர்.

Published by
Ajith V

Recent Posts