லியோ படத்திற்கு இப்படியும் ஒரு சிக்கலா? தளபதிக்கு வந்தது சோதனையா… சாதனையா?

2கே கிட்ஸ்களைக் கவர வேண்டும் என்றால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர் இன்றைய சினிமாக்காரர்கள். அதனால் தான் பெரும்பாலான படங்களில் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்க விடுகின்றன. அதே போல படங்களில் த்ரில்லர், திகில், காமெடி என அனைத்தும் செம ப்ரஷ்ஷாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

அதனால் தான் படத்திற்கு படம் இப்போது பட்டையைக் கிளப்பும் விதத்தில் காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் படங்களில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தளபதி விஜயின் கில்லி படம் தான்.

Vijay
Vijay

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை ஆக்ஷன் ஆக்ஷன் ஆக்ஷன் தான். இப்போது இந்த ஆக்ஷன் தான் விஜய் படத்திற்கு சிக்கலைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை விஜய் படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படம் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். அதனால் அவர்களைக் கவரும் வகையில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் காட்சிகள் ஏராளமாக இருக்கும்.

ஆனால் இந்த லியோ படத்தைப் பொருத்த வரை ரொம்ப ரொம்ப ஆக்ஷன் காட்சிகளும், கொடூரமான கொலைகளும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் இருக்கும் என்பது படத்தின் சில டிரெய்லர் மற்றும் கிளிம்ப்ஸ்களைப் பார்க்கும் போது தெரிகிறது. இதனால் அப்படி என்ன சிக்கல் வரப்போகிறது என்று தானே கேட்கிறீர்கள். வாங்க பார்க்கலாம்.

தளபதி விஜயின் நடிப்பில் விறுவிறுப்பாகத் தயாராகி வரும் படம் லியோ. இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் தான் கொடுக்கப் போறாங்களாம். அதனால பல காட்சிகள் சென்சாரில் கட் பண்ணுவதற்கு வாய்ப்புகள் இருக்கு. ரத்தம் தெறிக்கிற மாதிரி காட்சிகளும், கொடூர கொலை செய்வது போன்ற காட்சிகளும் அதிகமாக உள்ளதாம்.

அதனால இந்தப் படத்திற்கு யுஃஏ சர்டிபிகேட் கிடைக்காது. ஏ சர்டிபிகேட் தான் கிடைக்குமாம். இதுவரை தளபதி படத்திற்கு ஏ சர்டிபிகேட்டே கொடுத்;தது இல்லையாம்.

Leo 2
Leo 2

முதல் தடவையா யு சர்டிபிகேட் கிடைச்சது வாரிசு படத்திற்குத் தான். இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைச்சதுன்னா வயசானவங்களும் சரி. குழந்தைகளும் சரி. இந்தப்படத்திற்குத் தனியாக செல்ல தயங்குவாங்க. அவங்க பார்க்குறதும், பார்க்காததும் அவங்க அவங்க விருப்பம் தான். ஆனா இப்படி ஒரு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்கன்னா என்ன செய்வாங்க?

ஆக்சன் காட்சிகள் எல்லாம் தூக்க வேண்டியிருக்கும். நிறைய கொடூரமான காட்சிகளும் இருக்காது. இது தளபதிக்கு வந்த சோதனையா, சாதனையா? இதுதான் விஜயின் முதல் ஏ படம் என்பது சோதனை தான். படம் பட்டையைக் கிளப்பும் வகையில் ஓடி விட்டால் சாதனை தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...