ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் 9 கிரகங்களில் 5 நல்லது செய்கிறது என்றால் மீதி உள்ள 4 கிரகங்கள் எதிராக வேலை செய்யக்கூடியதாகத் தான் இருக்கும்.
அதற்கு ஒரு வழிபாடு செய்ய வேண்டியிருக்கும்.

எந்தக் கிரகங்கள் சரியில்லை என்றாலும் அனைத்திற்கும் சேர்த்து ஒரே கடவுளை வழிபட முடியுமா என்று கேட்டால் அது கண்டிப்பாக முடியும். எது சரியில்லை என்றாலும் இவர் கிட்ட சொன்னால் போதும். அவர் தான் தமிழ்க்கடவுள் முருகன். இவரை வழிபட எல்லாவித பிரச்சனைகளில் இருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும்.

நாளென் செய்யும் வினைதான் என்செய்யும்
எனை நாடி வந்த கோள் என்செய்யும்
கொடும் கூற்று என்செய்யும்?
குமரேசரின் இருதாளும் சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே…

இது ஒரு அழகான பாடல். தினமும் பூஜையில் அமர்ந்து இந்தப் பாடலைப் பாடுங்கள்.

ஏதாவது ஒரு கிரகத்தின் தாக்கம், பிரச்சனையால் கண்டிப்பாக நாம் அவதிப்படுகிறோம். இந்தக் கிரகங்கள் 12 ராசிகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இதற்கு உள்ளே 27 நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. நாம் எல்லோரும் இந்த 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்குள் தான் அடங்குகிறோம்.

9p
9p

இந்த 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் தன்னோட கட்டுப்பாட்டில் முருகப்பெருமான் வைத்துள்ளார். முருகனைச் சிக்கென்று பிடித்த அடியார்களுக்கு நாள் என்செய்யும், கோள் என் செய்யும் என்று அருமையாக அருணகிரிநாதர் பாடியுள்ளார். முருகப்பெருமானின் அணிகலன்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் 27 வரும். பார்க்கலாமா…

முருகப்பெருமானின் தாள் 2, சிலம்பு 2, சதங்கை 2, தண்டை 2, ஷண்முக முகங்கள் 6, தோள்கள் 12, கடப்ப மலர் மாலை 1 என எல்லாவற்றையும் சேர்த்தால் 27 வரும். இவை கலியுகத்தின் கண்கண்ட கடவுள், நம் சொந்தக் கடவுள், கந்தக்கடவுளிடம் அடங்கியுள்ள போது நாம் ஏன் புலம்ப வேண்டும்? இந்தப் பாடலை பக்தர்கள் படித்தால் அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாவிதமான துன்பங்களும், பிரச்சனைகளும் நீங்கி பலன் பெறலாம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews