தலைவர் 171 குறித்த சூப்பரான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!.. அடுத்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் ரெடி!..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் லியோ ஜெயிலர் வசூலை முந்தவில்லை என்பதில் உறுதியாகவே உள்ளனர்.

லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி விட்டனர். ஆனால், தற்போது தலைவர் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் ஆரம்பிக்க உள்ளார் என்றதும் அய்யா, சாமி என மரியாதை கொடுக்க ஆர்மபித்து விட்டனர்.

தலைவர் 171 படம்

600 கோடி வசூல் கொடுத்த இயக்குநராக லோகேஷ் கனகராஜ் மாறிய நிலையில், தலைவர் 171வது படம் 1000 கோடி வசூலை நிச்சயம் அடிப்பது உறுதி என்கிற நம்பிக்கை வந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் இன்னும் ஒரு வாரத்தில் தலைவர் 171வது படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் அமரப் போவதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க போகிறேன் என்றும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தலைவர் 171வது படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் ஆரம்பம்

தலைவர் 171வது படத்தை வேகமாக முடித்து விட்டு அடுத்து கார்த்தியின் கைதி, சூர்யாவுடன் ரோலக்ஸ் மீண்டும் கமலுடன் இணைந்து விக்ரம் 3 உள்ளிட்ட படங்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில் லோகேஷ் கனகராஜ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

இந்தி, தெலுங்கு நடிகர்களே லோகேஷ் கனகராஜை கொத்தாக தூக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்கிற முடிவுடன் ஒரு பக்கம் உள்ள நிலையில், 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் என்றும் கூறப்படுகிறது.

எல்சியூ படங்கள்

தனது எல்சியூவில் உள்ள கதாபாத்திரங்களுக்கு தனித்தனி படங்களை கொடுக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் அனைத்து படங்களையும் தன்னால் மட்டுமே இயக்க முடியாது என்பதால் தனது உதவி இயக்குநர்களை வைத்து சிறு சிறு படங்களை இயக்கப் போவதாகவும் நெப்போலியன், ஏஜென்ட் டீனா, அமர் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு தனி படங்களை உருவாக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோலக்ஸ், கைதி 2, விக்ரம் 3 படங்களை மட்டும் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171வது படத்தை முடித்து விட்டு இயக்கப் போவதாக கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.