லியோ படத்தில் செஞ்ச தப்பை தலைவர் 171 படத்தில் செய்ய மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் வாக்குறுதி

லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நியூ படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தவறுகளை தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தலைவர் 171 வது படத்தில் அந்த தவறு நடக்காது என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி, பிக் பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், அனுராக் காசியப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான லியோ திரைப்படம் 600 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் பேட்டி:

ஆனால், ஜெயிலர் படம் அளவுக்கு பொதுமக்கள் லியோவை கொண்டாடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்கு காரணம் அந்த படத்தின் இரண்டாம் பாதி சொதப்பியது தான். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லன், துள்ளலான பாடல்கள், காமெடி காட்சிகள், ஆக்சன், மாஸ் என அனைத்தும் பக்காவாக இருந்த நிலையில் கதை பழசாக இருந்தாலும் ஸ்கிரீன் பிளே படத்தை தாங்கி பிடித்தது.

லியோ படம் ஹாலிவுட் படமான தி ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தை தழுவி லோகேஷ் கனகராஜ் வெர்ஷனில் போலியான பிளாஷ்பேக் உடன் வந்து கடுப்பேற்றியது. படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக கிட்டத்தட்ட 90 போட்டிகளுக்கு மேல் கொடுத்த லோகேஷ் கனகராஜ் எந்த இடத்திலும் படத்தின் குறைகளை சொல்லாமல் வெறும் ஹைப்பை மட்டுமே ஏற்றி ரசிகர்கள் மூலமாக வசூலை அள்ளிக் கொண்டார்.

அந்த தப்பை பண்ண மாட்டேன்:

படம் வெளியான பின்னர் நெகடிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கிய நிலையில், லியோ ஃபேன்ஸ் தியரிக்களை வைத்து ஒரு உருட்டு உருட்டினார். தற்போது அதிலிருந்து தப்பிக்க படத்தின் ரிலீஸ் தேதியை முன்னதாக அறிவித்ததுதான் பிரச்சனை என்றும் இனிமேல் தான் இயக்கப் போகும் படங்களுக்கு அப்படி சொல்ல மாட்டேன் என்றும் அந்தப் பிரஷர் தான் லியோ படத்தின் இரண்டாம் பாதியை கெடுத்து விட்டதாக ஒரு வழியாக ஒப்புக் கொண்டுள்ளார். தலைவர் 171 படத்திற்காக கிரவுண்ட் லெவல் ஒர்க் பண்ணி ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வருவதாக கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் இந்த புதிய பேட்டி ரஜினி ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் விஜய் ரசிகர்களை காண்டாக்கியும் விட்டது. எக்ஸ்ப்ரீமென்ட் செய்ய இயக்குனர்களுக்கு விஜய் தான் சோதனை எலியா? என கேட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews