ஒரு கீபோர்டும் மவுசும் ரூ.23000மா? அப்படி என்ன இருக்கு அதில்?

500 முதல் 1000 ரூபாய்க்கு கீபோர்டு, மவுசு சந்தையில் கிடைக்கும் நிலையில் ரூ.22,999 என்ற விலையில் லாகிடெக் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் கீபோர்டு மற்றும் மவுஸ் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

லாஜிடெக்கின் MX Master 3X மவுஸ் மற்றும் MX Keys S கீபோர்டு ஆகிய இரண்டின் விலை ரூ.22,995 என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஜிடெக் MX Keys S என்பது பிரீமியம் வயர்லெஸ் கீபோர்டு ஆகும். இது லேப்டாப்பில் இணைத்து தட்டச்சு செய்வதில் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். நேர்த்தியான, சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த கீபோர்டில் பல சிறப்பு கீகள் உள்ளன. . MX Keys S சூழலுக்கு ஏற்றபடி லைட்டிங்கை தானாக சரிசெய்யும் அம்சத்தை கொண்டுள்ளது.

MX Keys S ஆனது Windows, macOS, iPadOS மற்றும் Chrome OS ஆகியவற்றுடன் இணக்கமானது. இதனை ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுடன் இணைக்கலாம். நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது என்பதும், ஒரு AAA பேட்டரியில் 36 மாதங்கள் வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Logitech MX Keys S கீபோர்டின் சில நிறைகள் மற்றும் குறைகள்

நிறைகள்

* நேர்த்தியான, சிறந்த வடிவமைப்பு
* வசதியான, சிறந்த சுயவிவர விசைப்பலகை
* அமைதியான விசைகள்
* லைட்டிங் நிலைமைகளுக்குத் தானாகச் சரிசெய்யும் அம்சம்
* Windows, macOS, iPadOS மற்றும் Chrome OS ஆகியவற்றுடன் இணக்கமானது
* ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுடன் இணைக்க முடியும்
* நீண்ட பேட்டரி ஆயுள் (36 மாதங்கள் வரை)

குறைகள்

* விலை மிகவும் உயர்வு. ரூ.22,999
* பிரத்யேக மீடியா விசைகள் இல்லை
* USB பாஸ்த்ரூ இல்லை

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews