வாத்தியாராக நடித்த நம்ம ஹீரோக்களின் சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வை

பொதுவாக வாத்தியார் என்றாலே புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் சொல்வார்கள். அந்த வகையில் தமிழ்ப்படங்களில் வாத்தியாராக நடித்த ஹீரோக்களின் படங்கள் எல்லாமே செம மாஸ் ஹிட் கொடுத்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

முந்தானை முடிச்சு

Munthanai Mudichu
Munthanai Mudichu

1983ல் வெளியான படம். கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார். ஊர்வசி, தவக்களை உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.

ஏவிஎம் தயாரிப்பில் உருவான குடும்பக் கதை என்பதால் ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்து படத்தை பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆக்கினர்.

நம்மவர்

Nammavar
Nammavar

1994ல் வெளியான படம். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியுள்ளார். கமல், கௌதமி, கரண், நாகேஷ், ஸ்ரீவித்யா, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் மாதவன் இயக்கியுள்ளார். வசூலில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இது ஒரு தரமான படம்.

வாத்தியார் வீட்டுப் பிள்ளை

VVP
VVP

இந்தப் படத்தில் பள்ளிக்கூட வாத்தியாராக வரும் ராஜேஷின் தம்பியாக சத்யராஜ் வருகிறார். படத்தில் ஷோபனா, நாசர், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். 1989ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தான் சத்யராஜின் 100வது படம். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ், எம்ஜிஆரை வாத்தியார் என்றே அழைப்பார்கள் அல்லவா…

அதனால் தனது படத்துக்கும் வாத்தியார் வீட்டுப் பிள்ளை என்று வைத்துள்ளார். எம்ஜிஆருக்கு ஒரு எங்க வீட்டுப்பிள்ளை மாதிரி இவருக்கு ஒரு வாத்தியார் வீட்டுப்பிள்ளை. படம் அந்தக் காலத்தில் செம மாஸ் பிக் அப். படம் வெளியாகி 33 வருடங்கள் கடந்தும் கூட இப்போது பார்த்தாலும் ப்ரஷ்ஷாக இருக்கும்.

சாட்டை

பிரபு சாலமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜூனியர் பாலையா உள்பட பலர் நடித்த படம் சாட்டை. படத்தில் சமுத்திரக்கனி இயற்பியல் ஆசிரியர். தமிழ் வாத்தியாரான தம்பி ராமையா செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் விதம் செம கலாய். பணியை சரி வர செய்யாமல் நேரத்தைப் போக்கும் சில வாத்தியார்கள் செய்யும் தவறுகளுக்கு இந்தப் படம் சாட்டை அடி கொடுக்கிறது.

மாஸ்டர்

Master
Master

2021ல் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்த அதிரடி படம் மாஸ்டர். அனிருத் இசையில் படம் பட்டையைக் கிளப்புகிறது. விஜய் சேதுபதி வில்லனாக வந்து கலக்குகிறார். ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் வாத்தியாராக வந்து சக்கை போடு போடுகிறார்.

வாகை சூட வா

விமல் வாத்தியாராக வந்து அசத்துகிறார். 2011ல் சற்குணம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடிய படம். ஜிப்ரான் இசை பிரமிக்க வைக்கிறது. பாடல்கள் சூப்பர். இனியா, கே.பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

வாத்தி

வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் வெளியான படம். தனுஷ் வாத்தியாராக வந்து அசத்துகிறார். சம்யுக்தா மேனன் நாயகியாக வந்து அசத்துகிறார். ஜிவி.பிரகாஷ் குமார் மியூசிக்கில் வெளு வெளு என வெளுத்து வாங்கியிருக்கிறார்.
பாடல்கள் ஜோர். வா வாத்தி பாடல் மெகா ஹிட்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...