கார்த்திய முதல்ல இத செய்ய சொல்லுங்க… பொளந்து கட்டும் கஞ்சா கருப்பு…

கஞ்சா கருப்பு தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பருத்திவீரன், நாடோடிகள் என பல திரைப்படங்களின் மூலம் தனது காமெடி கலந்த நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார்.

இவரின் காமெடிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கிராம பங்கான பேச்சின் மூலம் தனது காமெடிகளை மக்களுக்கு கொடுத்தவர். எப்போதுமே பிஸியாக இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அழகிய தமிழ்மகன், சண்டகோழி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கியவர்.

1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!

இவர் மேலும் வேல்முருகன் போர்வெல்ஸ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். ஆனால் அப்படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அப்படத்தின் மூலம் மிகப்பெரிய கடனில் மூழ்கினார். அக்கடனில் இருந்து இன்றுவரை அவர் வெளிவரவில்லையாம்.

இவர் பருத்திவீரன் திரைப்படத்தில் தனது காமெடியின் மூலம் மக்களை கவர்ந்தார். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட அமீர்- பருத்திவீரன் பிரச்சினையில் கூட அமீருக்கு ஆதரவாக தனது குரலை கொடுத்திருந்தார். அமீரால்தான் கார்த்தி தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார் எனவும் கார்த்தி ஒரு போதும் அமீரை மறக்க கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி!.. பிரபாஸ் படத்துக்கு இப்படியொரு சான்றிதழா?

இவ்வாறு தொடர்ந்து தனது ஆதரவை தெரிவித்து வரும் கஞ்சாகருப்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கார்த்தி குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். கஞ்சாகருப்பிடம் செய்தியாளர் ஒருவர் இதுவரை பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் பலர் பின்னாளில் தெரிவதில்லை. ஆனால் நீங்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து கொண்டிருப்பது குறித்த ரகசியத்தை கூறுமாறு கேட்டார்.

ஆனால் அதற்கு கஞ்சா கருப்பு தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதற்கு நான் எனது குருவின் காலை தொட்டு கும்பிட்டதே காரணம் எனவும் மேலும் கார்த்தியை தன்னை வளர்த்த குருவான அமீரின் காலை தொட்டு கும்பிட சொல்லுங்க எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நாளும் தன்னை வளர்த்துவிட்டவர்களை நாம் மறக்க கூடாது எனவும் தான் அப்படி இருப்பதாலேயே இன்று நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ராதிகாவாலதான் அந்த பட வாய்ப்பை இழந்தேன்… உண்மையை உடைக்கும் பிரபல நடிகை விஜி சந்திரசேகர்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.