பொங்கலுக்கு பின் சம்பவத்தில் இறங்கும் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணி!

தென்னிந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட இயக்குனர் ஆன இயக்குனர் சங்கருக்கு இணையாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இயக்குனர் தான் ஏஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான தீனா, ரமணா, ஸ்டாலின், ஏழாம் அறிவு, கஜினி, துப்பாக்கி, கத்தி என முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களை வைத்து வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்திருந்தார். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் திரைப்படத்திற்கு இனி தோல்வியே கிடையாது எனும் கூறும் அளவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாக துவங்கினர்.

அந்த அளவிற்கு அற்புதமான திரைக்கதை வித்தகர் எனும் சிறந்த பட்டத்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார் ஏ.ஆர். முருகதாஸ். இந்த நிலையில் அவர் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வெற்றியைப் பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான அகிரா திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது. அதை அடுத்து விஜயின் சர்க்கார் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்திருந்தார். இறுதியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

இதை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் நடிகர் விஜயுடன் இணைந்து ஒரு படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி இருந்தது அதன் பின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏ.ஆர். முருகதாஸிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பின் படங்கள் இயக்குவதில் மிகப்பெரிய இடைவெளி எடுத்துக்கொண்ட ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது முன்னணி இளம் நடிகரான சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியாகி இருந்தது.
நடிகர் சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் மிருணால் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு ஒரு துப்பாக்கி திரைப்படத்தைப் போல நடிகர் அஜித்திற்கு தீனா திரைப்படத்தைப் போல முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என முன்னதாக தகவல் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் எஸ்கே 21 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி வரை நடைபெற இருப்பதால் எஸ்கே 23 படத்தில் கலந்து கொள்ள கால்ஷீட் இல்லை. இந்த மாத இறுதிக்குள் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்புகள் முடிவடையும் நிலையில் பொங்கலை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாசுடன் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.