யோஹன் அத்தியாயம் ஒன்றுக்கு மீண்டும் பிள்ளையார் சுழியா? லியோ வெற்றி விழாவில் Twist வைத்த கௌதம் மேனன்

லியோ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் இருக்க, தற்போது வெற்றி விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் சொன்ன Twistஆல் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர்.

லியோ திரைப்படம் கடந்த இருவாரங்களுக்கு முன் வெளியாகி உலகெங்கிலும் வசூலைக் குவித்துக் கொண்டிருக்க இத்திரைப்படத்தின் வெற்றி விழா சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன், மடோனா, மிஷ்கின், மன்சூர் என அனைத்து திரைப்பட்டாளங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைய விழா வண்ணமயமானது.

இந்நிலையில் லியோ வெற்றி விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும் போது நடிகர் விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கதைக் களங்கள் போல் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையடுத்து பேசிய இயக்குநர் கௌதம் மேனன் மிஷ்கின் சொல்வது போல் தளபதி விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கதைக் களங்களில் நடிக்க வைக்க வேண்டுமானால் அதற்கு ‘யோஹன் அத்தியாயம் ஒன்று‘ போன்ற கதைகள் சிறப்பாக இருக்கும் என்று Twist வைத்தார்.

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்!

இதனால் ரசிகர்களிடையே ஆரவாரம் எழுந்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த 2012-ல் தளபதி விஜய்யை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று‘க்கான பட வேலைகளில் ஈடுபட்டார். இதுகுறித்த அறிவிப்பும், படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏ.ஆர். ரஹ்மமான் இசையமைக்க ஒப்பந்தாமானார். அதன்பின் சில காரணங்களால் இந்தப் படம் டிராப் ஆனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Gowtham 2

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உலக நாயகனுக்கு ‘வேட்டையாடு விளையாடு’, அஜீத்திற்கு ‘என்னை அறிந்தால்’, சூர்யாவுக்கு ‘காக்க காக்க’, தனுசுக்கு ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’, சிம்புவிற்கு ‘வெந்துதணிந்தது காடு’, விக்ரமிற்கு ‘துருவ நட்சத்திரம்’ என சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களைக் கொடுக்க தளபதி விஜய்யுடன் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மீண்டும் இவ்விருவரும் இணைந்தால் அந்த காம்பினேஷன் ரசிகர்களுக்கு புது விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம். இதற்கான பிள்ளையார் சுழியை லியோ வெற்றி விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews