லியோ 1000 கோடியை டச் பண்ணாது…! மற்ற ஹீரோக்கள் இப்படி செய்வாங்களான்னு தெரில…  தயாரிப்பாளர் தகவல்

லியோ படம் வெற்றியா, தோல்வியா என பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த வேளையில் லியோ படத் தயாரிப்பாளர் லலித் குமார் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

தளபதி விஜயின் லியோ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் படத்திற்கு தியேட்டரில் கூட்டமே இல்லை. வசூலில் சாதனை என பொய்யாக நிறைய வதந்திகள் வருவதாகவும் சொல்கின்றனர். இதுபற்றி படத்தயாரிப்பாளர் லலித் குமார் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

லியோ படம் முதலில் நல்லா எதிர்பார்ப்பு வந்தது. முதலில் படம் பார்த்தவர்கள் செகன்ட் ஆப் நெகடிவ்வா இருக்கு. அதே நேரம் 2வதாக படத்தைப் பார்க்கும் போது படம் நல்லா இருக்குன்னு சொன்னவங்க தான் ஜாஸ்தி.

7 நாளுக்குப் பிறகு படத்தின் வசூல் 461 கோடி. இதை பண்ணதனால் தான் சொல்கிறோம். 1000 ஸ்கிரீன்ஸ் பிளஸ் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருக்கோம். இதுல சி சென்டர்ல உள்ள தியேட்டர்ஸ்சும் இருக்கு. அதுல நான் ஏசி தியேட்டர்ஸ் அவுட்டர்ல இருக்கு. அதுக்குலாம் 80 பர்சன்ட் வாங்கிருக்கோம். 42 தியேட்டர்ல வந்து 80 பர்சன்ட் வாங்கிருக்கோம். இந்த மாதிரி தியேட்டர்ல ஆடியன்ஸப் பார்த்தீங்கன்னா பர்ஸ்ட் டைம் ஓரளவு இருப்பாங்க. செகன்ட் டைம் ஆடியன்ஸ் கம்மியாயிடுவாங்க.

இந்தப் படம் எனக்கு பட்ஜெட்டப் பார்த்தீங்கன்னா 300 பிளஸ் கோடி வந்துருக்கு. நான் இந்தப்படம் மேக்சிமம் ரிஸ்க் எடுத்துத் தான் பண்ணிருக்கேன். இந்தப் படம் 100 பர்சன்ட் 1000 கோடியை டச் பண்ணாது. சும்மா பேசிக்கிட்டு இருக்காங்க.

இந்தப் படத்துக்கு துணிவு, வாரிசு மாதிரி நிலைமை வரக்கூடாதுங்கறதுக்காகத் தான் ரொம்ப தெளிவா ரிலீஸ் டேட் போட்டேன். விஜய் சார் திருப்பி திருப்பிக் கேட்டாரு. அவ்வளவு கான்பிடண்ட்டா இருக்கா? ஆமான்னு சொன்னேன். ரிலீஸ் டேட் போட்டுத் தான் சூட் பண்ணினோம்.

அதுக்காக எல்லா வேலைகளுமே பிளான் பண்ணித் தான் செஞ்சோம். இன்னொரு விஷயம் பார்த்தீங்கன்னா காஷ்மீர்ல வந்து ஒரு வாரம் சூட் விஜய் சாருக்கு இல்ல. அப்ப வந்து சென்னை அவரு வந்துட்டுப் போற மாதிரி இருந்துச்சு. ஆனா அவரு வந்து டெய்லி ஈவ்னிங் போன் பண்ணி சூட் கரெக்ட்டா போச்சா? இன்னிக்கி பிளான் பண்ணதை எடுத்துக்கிட்டாங்களான்னு கரெக்டா கேட்பாரு.

Leo 5
Leo

இது வந்து அவரு பழக்கமா வச்சிருக்காரு. அதே மாதிரி சென்னைல சூட்டிங் வந்து அவரு இல்லாத சீனை எல்லாம் முடிச்சிட்டாங்களா? டைரக்டர் முடிச்சாச்சா? என்ன என்ன பெண்டிங் இருக்குன்னு கேட்பாரு. இதை மத்த ஹீரோ கேட்பாங்களான்னு தெரில. இவரு 90 நாள் நடிச்சிருக்காருன்னா நான் 130 நாள் சூட் பண்ணிருக்கேன்.

இந்த 40 நாளும் எங்கிட்ட கேட்காத நாளே கிடையாது. டெய்லி வந்து அப்டேட் கேட்பாரு. டப்பிங் யார் யார் முடிச்சிருக்கா? யாருக்கு பென்டிங் இருக்குன்னு கேட்பாரு. இது வந்து எனக்குன்னு இல்ல. அவரு பழக்கமா வச்சிருக்காரு. இதே மாஸ்டருக்கும் அவரு பண்ணினாரு. அவரு படம் முடியற வரைக்கும் அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பாரு. அதுதான் அவரோட இவ்ளோ பெரிய வளர்ச்சிக்குக் காரணம்னு நான் ஃபீல் பண்றேன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews