பொழுதுபோக்கு

ஜெயிலர் எல்லாம் ஒதுங்கி நில்லு!.. கில்லியாக வசூல் அள்ளிய விஜய்.. இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எல்சியூ படமாக உருவான விஜய்யின் லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது.

பீஸ்ட், வாரிசு வரிசையில் இந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படமும் ஒரு முழுமையான படமாக அமையவில்லை என்கிற விமர்சனங்களை பெற்றாலும் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கொட்டிய உண்மையான உழைப்பு காரணமாக அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

அவதார் 2வே சரியில்லை

ஹாலிவுட் படமான அவதார் 2வே இரண்டாம் பாதி ரசிகர்களை ஏமாற்றும் நிலையில், லியோ மட்டும் என்ன தக்காளி தொக்கா? என்பது போலத்தான் உள்ளது.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திற்கும் சில விமர்சகர்கள் படத்தில் திடீர் திடீரென ஏஜென்ட்டுகள் வருகின்றனர் என்றும்  கமலே கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என கலாய்த்து இருந்தனர்.

லியோவுக்கு குவிந்த எதிர்ப்பு

இந்நிலையில், விஜய் நடித்த லியோ படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நெகட்டிவிட்டியை பரப்பி படத்தை டிசாஸ்டர் என்றே குறிப்பிட்டு எல்லை மீறி தொடர்ந்து அந்த படம் குறித்த பதிவுகளையும் வசூல் நிலவரங்கள் என பொய்யான தகவல்களையும் மனோபாலா விஜயபாலன் மற்றும் ரமேஷ் பாலா உள்ளிட்ட பலரும் பரப்பி வந்தனர்.

மீசை ராஜேந்திரன் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்றும் முறியடித்து விட்டால் தன்னுடைய மீசையை எடுத்து விடுகிறேன் என சவால் எல்லாம் விட்டு இருந்தார். அதன் பின்னர், லியோவின் வசூல் அறிவிப்பு வெளியாக, ஜெயிலரை விட்டு விட்டு 2.0 பக்கம் சென்று விட்டார்.

540 கோடி வசூல்

நடிகர் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி முதன் முறையாக 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் லியோ படம் இணைந்துள்ளதை முன்னிட்டு நாளை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

லியோ படம் பெரிய வெற்றிப் பெற்று வசூல் வேட்டை நடத்தி இருந்தாலும், தயாரிப்பாளர் லலித் குமார் நடிகர் விஜய்க்கோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கோ மற்றும் அனிருத்துக்கோ எந்தவொரு பரிசையும் இதுவரை வழங்கவில்லை.

ஜெயிலர் வசூல் முறியடிப்பு

மாஸ்டர் சமயத்திலேயே சம்பளம் கொடுத்தால் போதும், எந்த பரிசும் வேண்டாமென விஜய் சொல்லி விட்ட நிலையில், கார் கொடுக்கும் வழக்கத்தை எல்லாம் விட்டு விட்டேன் என லலித் பேட்டியில் கூறியிருந்தார்.

ஜெயிலர் படம் அதிகாரப்பூர்வமாக 525 கோடி வசூல் செய்த நிலையில், லியோவின் அதிகாரப்பூர்வ வசூல் 540 கோடி என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது விஜய் ரசிகர்களை அலப்பறை செய்ய வைத்துள்ளது.

Published by
Sarath

Recent Posts