TMS – பாடிய அந்த இரண்டு பாடல்கள்.. அதோடு முடிந்த இசைப்பயணம்..? உண்மை பின்னணி இதான்!

தமிழ்ச்சங்கம் உருவான மதுரை நகரில் உள்ள சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து முறைப்படி இசையை கற்றுக் கொண்டு தன் மயக்கும் குரல் வளத்தால் இசை ரசிகர்களைக் கிறங்க வைத்தவர் தான் பிரபல பின்னணி பாடகர் TM சௌந்தரராஜன். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடையில் பாடி கச்சேரிகள் செய்து வந்த TMS அவர்களுக்கு முதன் முதலாக ‘கிருஷ்ண விஜயம்’ என்னும் படத்தில் பின்னனி வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ‘ராதே என்னை விட்டு போகாதடி..’ என்ற பாடலைப் பாடினார். அந்த பாடல் ஹிட் ஆகவே தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆரின் ஆஸ்தான பாடகரானார். இரு பெரும் ஜாம்பவான்களுக்கும் தனி தனியே குரல் எடுத்துப் பாடி பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்தார் TMS.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களையும், 1000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார் TMS. 1950-ல் ஆரம்பித்த இவரது இசைப்பயணம் இறுதியாக 2010-ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்காக பாடிய ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடல் வரை நீண்டது. இப்படி திரையுலகில் உச்சத்தில் இருந்தவருக்கு 1980களுக்குப் பிறகு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருக்கிறது.

நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்

குறிப்பாக இப்ராஹிம், T. ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படம் TMS திரைவாழ்வை புரட்டிப்போட்டது என்று கூறுவார்கள். காரணம் என்னவெனில் அந்த படத்தில் TMS பாடிய இரண்டு பாடல்கள் தான். காதல் தோல்வியில் இருக்கும் காதலன் சோகத்தில் பாடும் பாடல்தான் ‘நான் ஒரு ராசியில்லா ராஜாதான்..’ இந்த பாடலின் வரிகளைக் கேட்ட TMS முதலில் பாட மறுத்திருக்கிறார். அதன் பின் T. ராஜேந்தர் சம்மதிக்க வைத்து பட வைத்துள்ளார்.

இதற்கு அடுத்ததாக இதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான ‘என் கதை முடியும் நேரமிது..’ என்ற பாடலையும் TMS பாடியிருப்பார். இந்த இரண்டு பாடலின் வரிகளும் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. எப்பேற்பட்ட பாடகர் இப்படி ‘ராசியில்லாத, என் கதை முடியும் நேரம் இது..’ என்று படலாமா என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இந்த படத்திற்குப் பிறகு நிஜமாகவே TMS அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது. இது பற்றி பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்த TMS இந்த இரண்டு பாடல்களால் எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல.. அடுத்தடுத்து நிறைய பாடகர்கள் உருவாகி விட்டார்கள். அதனால் எனக்கு வாய்ப்புகள் குறைந்தது என்று தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...