உலக நாயகனை உலகறியச் செய்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களின் இயக்குநர் இவரா? கே.விஸ்வநாத் திரைப்பயணம்!

இன்றைய 2K கிட்ஸ்களுக்கு தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் வரும் கிராமத்துப் பெரியவர் கதாபாத்திரம் நன்கு பரிச்சயம். ஆனால் அவரை வெறும் நடிகராகப் பார்த்தவர்களுக்கு தெரியாத மிகப்பெரிய விஷயம். அவர் இந்திய சினிமாவின் மிகப் புகழ் பெற்ற இயக்குநர் கே.விஸ்வநாத் என்பது. உலக நாயகன் கமலஹாசனுக்கு அழியாப்புகழை ஏற்படுத்திய இரண்டு புகழ்பெற்ற படங்களின் இயக்குநர். ஒன்று சலங்கை ஒலி, மற்றொன்று சிப்பிக்குள் முத்து.

கமல்ஹாசனை சினிமாவில் வளர்த்தெடுத்த முக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். தெலுங்கு திரையுலகில் சவுண்ட் இன்ஜினியராக அறிமுகமாகி பின் இயக்குனராக தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார்.

இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாத். ஏராளமான படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

அண்ணா மேல் உயிரையே வைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா சிலையை திறக்க ஒப்புக் கொள்ளாத காரணம்..

குறிப்பாக இவர் தெலுங்கில் இயக்கிய சங்கராபரணம் திரைப்படம் இன்றும் இந்தியாவின் டாப் 10 படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் நடிப்புத் திறமையை உலகம் அறிய வைத்த சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி உள்ளிட்ட 50 திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வந்தார்.  2000களில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குநர் கே.விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

கலா தபஸ்வி’ என்று அழைக்கப்பட்ட கே.விஸ்வநாத், 5 தேசிய விருதுகள், ஏழு நந்தி (மாநில) விருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டவர், 2017-ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதாசாகெப் பால்கே’ விருதையும் பெற்றிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews