வருங்காலத்தை முன்கூட்டியே கணித்து படங்கள் எடுத்த உலகநாயகன்: இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?

இந்திய சினிமாவின் லெஜண்ட் என உலக நாயகன் கமல்ஹாசனை சினிமா உலகம் கொண்டாடி வருவது இப்போது அல்ல. அது என்றோ ஆரம்பித்ததுதான். சினிமாவில் தான் சம்பாதித்த சொத்துக்களை மீண்டும் சினிமாவிலேயே போட்டு சோதனை முயற்சியில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இருப்பார். மேலும் சில படங்களில் வருங்காலங்களில் இப்படியெல்லாம் நடக்கும் என கணித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருப்பார். அந்த லிஸ்ட்-ல் வெளியான உலகநாயகனின் சில படங்கள்

விக்ரம்

தற்போது வெளியான விக்ரம் படத்தை அனைவரும் கொண்டாட இதெல்லாம் நான் அப்பவே பார்த்தாச்சுடா என்று பழைய விக்ரம் படத்தில் உலகநாயகன் செய்த மேஜிக் என்னவென்றால் ரேபோக்களை புகுத்தியது. 1986-களில் வெளியான விக்ரம் படத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சினிமாவாக எடுத்திருந்தார் ராஜசேகர். இப்படத்தில் கமல்ஹாசனும் சுஜாதாவுடன் திரைக்கதை எழுத படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது உலகை ஆளும் ரோபோக்களை அப்போதே தனது படத்தில் காட்டியிருப்பார்.

குருதிப்புனல்

ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் உலகநாயகன் இணைந்து நடித்த படமான குருதிப்புனலில் Dolby தொழில்நுட்பத்தை முதன்முதலில் தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அனைத்து திரையரங்குகளிலும் Dolby தொழில்நுட்பத்தில் படங்கள் திரையிடப்பட்டன.

ஹேராம்

உலக நாயகனுடன் ஷாரூக்கான் இணைய 2000ம் ஆண்டு வெளிவந்த ஹேராம் திரைப்படம் பல வரலாற்று படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. இதைத் தழுவி பல படங்கள் வெளிவந்தன.

இந்தியன் 2 இன்ட்ரோவை ரிலீஸ் செய்த ரஜினிகாந்த்!.. கம்பேக் கொடுத்த இந்தியன் தாத்தா.. எப்படி இருக்கு?

விருமாண்டி

சண்டியர் என்ற தலைப்பினால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து விருமாண்டி என்ற தலைப்பில் உலகநாயகன் இயக்கி நடித்தார். ரஷோமோன் விளைவு என்ற திரைக்கதை யுக்தியை இத்திரைப்படத்தில் கையாண்டார் உலக நாயகன். மேலும் டப்பிங் பணிகள் இல்லாமல் படப்பிடிப்பு தளத்திலேயே வசனங்கள் பதிவு செய்யப்பட்டது.

Kamal hasan 1

தசாவதாரம்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் உலகநாயகனை 10 கேரெக்டரில் நிலைநிறுத்தி தமிழ்சினிமா ஒப்பனை உலகில் புது புரட்சியையே ஏற்படுத்தியது. இதற்காக உலகநாயகனின் உழைப்பு அபாரமானது. மேலும் சுனாமி காட்சிகளையும் படமாக்கி பிரமிக்க வைத்திருப்பர்.

மும்பை எக்ஸ்பிரஸ்

தமிழில் முதன்முதலாக டிஜிட்டல் மேராவில் படமாக்கப்பட்ட படம் என்றால் அது மும்பை எக்ஸ்பிரஸ் தான். அதுவரை பிலிம் ரோல்களில் ஒளிப்பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர்கள் மும்பை எக்ஸ்பிரஸ் கொடுத்த தைரியம் காரணமாக டிஜிட்டலுக்கு மாறினர். இதனால் ஏராளமான பணம் தயாரிப்புச் செலவில் மிச்சமானது.

இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வருத்தி சினிமா உலகில் சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி தோல்விகளைக் கடந்து சினிமாவிற்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் கமல்ஹாசனின் படைப்புகள் அனைத்தும் பாடமாக அமைந்திருக்கும் என்பது சந்தேகமேயில்லை.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...