குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!



குடியரசு என்பதற்கு குடிமக்களின் அரசு என பொருள். அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அந்த தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கேற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்…. இது 1928 ஜனவரி 26 ல் காந்தி கூறிய வாா்த்தை இது.


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடந்தக் காலகட்டத்தில் “1928 ஜனவரி 26ம் நாளை இந்திய சுதந்திர நாள்” என்று காந்தி அறிவித்தார். அவர் அறிவித்தப்படி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த நாள்தான் இன்று குடியரசு தினமாக போற்றப்படுகின்றது. 1950 – ஜனவரி 26 ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.

குடியரசு தினத்தின் அர்த்தம் புரிந்து சிறந்த குடிமகனாய் இருப்போம்… அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்

Published by
Staff

Recent Posts