பொழுதுபோக்கு

எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?

எம்ஜிஆரின் படங்களைப் பொருத்தவரை அது ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் படமாக இருக்கும். பெரும்பாலும் இவை கமர்ஷியலாக ஹிட் அடிப்பவை. அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் பாட்டு, பைட்டு சூப்பர் என்று கடைசியில் ஒரு வரி போடுவார்கள். அது நூற்றுக்கு நூறு எம்ஜிஆர் படங்களுக்குப் பொருந்தும்.

அதே போல சிவாஜியின் படங்கள் என்றால் நடிப்பு நடிப்பு நடிப்பு தான் என்று இருக்கும். கலைநேசர்கள் சிவாஜி படத்திற்கு நம்பி செல்லலாம். இவரது ஒவ்வொரு அசைவும் நடிப்பாகத் தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் இவரது உடல் உறுப்புகள் எல்லாமே தன் பங்கிற்கு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும். அதை உற்றுப் பார்க்கும் போது தான் தெரியும். அந்த அளவு பாடி லாங்குவேஜ் உள்ளவர்கள்.

அந்த வகையில் எம்ஜிஆரும், சிவாஜியும் இருதுருவங்களாகவே இருந்தனர். அவரது ரசிகர்களுக்குள்ளும் அடிக்கடி படங்களின் வெளியீட்டின்போது மோதல்கள் வருவதுண்டு. அதன்பிறகு அதே பலத்துடன் வந்த இருதுருவங்கள் ரஜினியும், கமலும் தான். தற்போது விஜய், அஜீத் உள்ளனர். இவர்களுக்கு இடையில் சிம்புவும், தனுஷூம் என்று இருந்தனர்.

இப்படி தமிழ்சினிமாவிற்குள் ஆரோக்கியமான போட்டி இருப்பதால் தான் ரசிகர்கள் திரையரங்கு பக்கம் வருகின்றனர். அந்த வகையில் எல்லோருக்கும் நீண்டநாள்களாக பலருக்கும் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அது இதுதான்.

MGR, Sivaji

அரசியலில் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றி ஏன் சிவாஜிக்குக் கிடைக்கவில்லை என்ற கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டு இருந்தார். இதற்கு பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் பதில் தெரிவித்துள்ளார். அதில், எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தார்.

அப்போது பாதி பேர் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அது மட்டுமல்லாமல் அந்த வெற்றியையும் தாண்டி எம்ஜிஆருக்கு பின்புலம் பக்காவாக இருந்தது. அது சிவாஜிக்கு இல்லை. அதையும் தாண்டி எம்ஜிஆரிடம் இருந்த அரசியலுக்கான ராஜ தந்திரம் சிவாஜியிடம் அந்தளவுக்கு இல்லை. இது தான் சிவாஜி அரசியலில் ஜொலிக்காமல் போனதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் படங்களில் அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கும். அது மட்டுமல்லாமல் அவருடைய படப்பாடல்களுமே அரசியலின் கொள்கை முழக்கமாக இருந்தது. இது எம்ஜிஆருக்கு பிளஸ் பாயிண்டாக இருந்தது. எம்ஜிஆர் ஏழை மக்களுக்கு வாரி வழங்குவார். அநியாயத்தைக் கண்டால் தட்டிக் கேட்பார். பாடல்களிலும் பேசும் வசனங்களிலும் தத்துவங்கள் கடல் அலை போல் வந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த மாபெரும் வெற்றியைத் தந்த நாடோடி மன்னன் படத்தில் சும்மா கிடந்த என்ற பாடலில் நானே போடப்போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும் திட்டம் என்று பாடல் வரிகள் இருக்கும்.

இவை எல்லாம் தான் எம்ஜிஆரை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்த்தது.

Published by
Sankar

Recent Posts