மகாத்மா காந்திக்கு தங்கத் தட்டில் பரிமாறிய கே.பி.சுந்தராம்பாள்.. பதிலுக்கு காந்திஜி செய்த தரமான சம்பவம்..

திரைத்துறையில் தன்னுடைய வெண்கலக் கணீர் குரலால் இசையுலகிலும் ஒரு சகாப்தத்தை உருவாக்கியவர் கே.பி. சுந்தராம்பாள். ஔவையார் என்றதும் நினைவுக்கு வருவது இவரது முகமே.

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதன் சுருக்கமே பின்னாளில் கே.பி. சுந்தராம்பாளாக மாறியது. சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்ட கே.பி. சுந்தராம்பாள் குடும்ப வறுமை காரணமாக ரயிலில் பிச்சை எடுத்து பாடியவர் பின்னாளில் ஒரு லட்சம் வரை சம்பளம் பெற்று திரையுலகையே அதிர வைத்தவர்.

சினிமாவிலும், பல்வேறு கச்சேரிகளிலும் பாடி தனது இசைஞானத்தை வளர்த்து இசையுலகில் தவிர்க்க முடியாத சக்தியானார். சுதந்திரப் போராட்டத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட கே.பி.சுந்தராம்பாள் மகாத்மா காந்தி மீதும், சத்தியமூர்த்தி மீதும் அளவற்ற பற்று கொண்டிருந்தார்.

கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளையர் எதிர்ப்பு போன்றவற்றில் தன்னுடைய பங்களிப்பைப் செய்தவர். மேலும் சுதந்திர வேட்கையைத் தூண்டும் பல பாடல்களையும் பாடி தேசப் பற்றினை வளர்த்தவர்.

தன் கணவர் இறந்தபிறகு பாடுவதை நிறுத்தியிருந்த கே.பி.சுந்தராம்பாளை மகாத்மா காந்தியே நேரில் சென்று மீண்டும் பாடுமாறு வலியுத்தினார் என்றால் எப்பேர்ப்பட்ட சக்தியாக விளங்கியிருப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் இறந்த பின் மேற்கொண்ட விதவைக் கோலத்தினை இறுதிவரை கடைப்பிடித்து கணவனின் அன்புக்கு பாத்திரமாய் விளங்கியவர்.

படிக்கும் காலத்தில் கையில் பணம் இல்லாத தவித்த ரஜினி.. நண்பர்களுடன் சாப்பிடப் போன போது ஏற்பட்ட அனுபவம்

ஒருமுறை மகாத்மா காந்தி ஈரோட்டுப் பகுதி விடுதலைப் போராட்ட நிகழ்வில் பங்கேற்ற போது கே.பி.சுந்தராம்பாள் இல்லத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரை வரவேற்று அவருக்காக தங்கத் தட்டில் விருந்து பரிமாறிஇருக்கிறார் கே.பி.சுந்தராம்பாள்.

அப்போது காந்திஜி அவரிடம், “சாப்பாடு மட்டும் தானா? இந்தத் தட்டு எங்களுக்கு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு கே.பி.சுந்தராம்பாள் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற காந்திஜி அந்த தட்டினை உடனே ஏலம் விட்டிருக்கிறார். அவ்வாறு கிடைத்த தொகையை காந்திஜி சுதந்திரப் போராட்ட நிதியில் சேர்த்திருக்கிறார்.

இவர் கணீர் குரலில் உருவான ”சிறைச்சாலை என்ன செய்யும்?” என்ற பாடலும், “காந்தியோ பரம ஏழை சந்நியாசி” என்ற பாடலும் அன்றைய காலக்கட்டத்தில் விடுதலை வேட்கையில் மிகப்பெரிய அதிர்வை தேச பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews