கோவிலில் மூலவரின்முன் நின்று ஏன் வணங்க்கூடாதென தெரியுமா?!


கோவிலில் வழிபடுவதற்கென ஆகமவிதிகள் நிறைய உண்டு. அதில்,கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று வழிபடக்கூடாதென்பது ஒரு விதி.

அவ்வாறு ஏன் வணங்கக்கூடாதென்றால்.
அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்குதான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு.
அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம்மீது பட்டால்தான் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமில்லாமல் சனிபகவானின் நேரடி பார்வை நம்மீது பட்டால், அவரின் வீரியத்தை நம்மால் தாள இயலாது. ஆனால், குருபகவான் கோவிலில் மட்டும் நேராய் நின்று சாமி கும்பிடலாம். அதனால் எப்போதும், கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

Published by
Staff

Recent Posts