கோவில் சுவற்றில் வெள்ளை, காவி நிற கோடுகள் ஏன்?!


கோவிலின் வெளிச்சுவற்றில் காவி, வெள்ளை நிறத்தில் கோடுகளை தீட்டி வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி காவியும், வெள்ளையுமாய் வரைந்திருப்பதற்கும் காரணம் உண்டு.

வெண்மை தூய்மையின் அடையாளம். காவி தியாகத்தின் அடையாளம். கல்வி கற்பவன் தூய உள்ளத்தோடு ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக சரஸ்வதி வெண் தாமரையிலும், மனிதன் செம்மையான(நேர்மை) வழியில் பொருள் தேட வேண்டும் என்பதற்காக திருமகள் செந்தாமரையிலும் இருவாசம் செய்வதாய் புராணங்கள் சொல்கின்றது. பக்திக்கு தூய்மையும், நேர்மையும் அவசியம் என்பதே இப்படி காவி, வெள்ளை பட்டை அடிப்பதின் நோக்கம். இப்பண்புகளை நம்மிடம் வளரச் செய்யும் இடமே கோவில்கள் என உணர்த்தவும் இப்படி வரையப்பட்டுள்ளது…

Published by
Staff

Recent Posts