குழந்தைகள் வேண்டும் என அடம் பிடிக்கும் கொங்குநாடு தால் ரெசிபி! எப்படி செய்யணும் தெரியுமா?

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த சுவை மிகுந்த கொங்குநாடு தால் வீட்டிலேயே செய்யலாமா…

செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 5 பல்
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

இந்திய எல்லை காவல்படையில் வேலை! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள், எண்ணெய் , தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு பருப்பை லேசாக மசித்து பின் வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இட்லி ,தோசை, சப்பாத்தி னு எல்லாத்துக்கும் ஒரே சைடிஸ்- முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி!

இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவை நாவிலே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews