உலகநாயகனுடன் கைகோர்த்த ஹெச்.வினோத் : வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்

உலகநாயகன் கமலஹாசன் தற்போது டைரக்டர் ஷங்கரின் இந்தியன் 2-வில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிசியாக இருக்கும் உலக நாயகன் தற்போது அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்களையு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

அந்த வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஏற்கனவே சதுரங்க வேட்டை மூலம் திரையுலகில் தடம் பதித்த இயக்குனர் ஹெச்.வினோத், தீரன் அதிகாரம் ஒன்றில் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்தார்.

அதன் பின்னர் அஜீத் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார் ஹெச். வினோத்.  இவரின் இந்த அபார வளர்ச்சி தான் உலகநாயகனை இயக்கும் வாய்ப்பையும் பெற்று கொடுத்தது. KH233-ல் இணைந்துள்ள ஹெச். வினோத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹெச். வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் உலக நாயகனை வைத்து விக்ரம் திரைப்படம் இயக்கி  பிரம்மாண்ட வெற்றி கொடுத்த நிலையில் தற்போது அவரது நண்பரான ஹெச். வினோத்தும் உலக நாயகனை இயக்கும் வாய்ப்பை பெற்றமையால் அவருக்கு டிவிட்டரில் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Lokesh

இந்தியன் 2 மற்றும் KH233 ஆகிய இரு படங்களையும் முடித்த பின்னர் உலக நாயகன் மணிரத்தினம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் KH234 பட பூஜைகள் அண்மையில் நடைபெற்றது. நாயகன்2 ஆக உருவாகும் இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலும் வெளியாகி ஆண்டவர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!

இவ்வாறு இளம் இயக்குநர்களுடன் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பணியாற்றுவது புதிதாக திரை உலகிற்கு அடியெடுத்து வைக்கும் கலைஞர்களுக்கு புது தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. மேலும் திறமையான இளம் இயக்குநர்களின் வரவால் தமிழ் சினிமா வேறொரு தளத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.