ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் அதிர்வு இன்றளவும் குறையவில்லை. விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த கமல் அடுத்தடுத்து பல படங்களின் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் மீண்டும் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு பத்து கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக வேட்டையாடு விளையாடு படத்தை விட கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்த திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் தற்பொழுது மீண்டும் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பழைய திரைப்படத்தில் சில வண்ணங்களை மாற்றி புதுப்பித்து சில எடிட்டிங் செய்து நாயகன் திரைப்படம் மீண்டும் நவம்பர் 3ஆம் தேதி 150 திரையரங்குகளுக்கு மேல் திரைக்கு வர உள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்களால் கமல் ரசிகர்கள் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாயகன் திரைப்படம் மீண்டும் வெளியாக ஒரு காரணம் கமல் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நாயகன். 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல் மற்றும் மணிரத்தினம் இணைந்து கமலின் 234 வது திரைப்படத்தை இயக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகத்தான் நாயகன் திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. கமல் தற்பொழுது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகளை முடித்த நிலையில் அடுத்ததாக இயக்கத்தில் தனது 233 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கமல் ராணுவ வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது .

கமல் ஹெச் வினோத் இணையும் இந்த படத்திற்கு முதலில் மர்மயோகி என தலைப்பு வைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அந்த தலைப்பில் தற்பொழுது மாற்றம் ஏற்பட்டு தலைவன் இருக்கிறான் என டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது.

சிவாஜி ஒரு திரைப்படங்களில் கூட முழு பாடல் பாடாததற்கு இப்படி ஒரு காரணமா?

இந்த படத்தை தொடர்ந்து தான் மணிரத்தினம் கமல் கூட்டணியில் கமலின் 234வது திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முன்னதாக மலையாள நடிகர் துல்கர், நடிகை திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்பொழுது மேலும் ஒரு நடிகையாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் நயன்தாரா கமலுக்கு போட்டி நடிகர் ஆன ரஜினியுடன் இரண்டு திரைப்படங்கள் நடித்த நிலையில் இதுவரை கமலுடன் ஒரு திரைப்படங்களில் கூட ஜோடி சேரவில்லை. தற்பொழுது முதல் முறையாக கமலுடன் இணைந்து நயன்தாரா நடிக்க இருக்கும் தகவல் நயன்தாரா ரசிகர்கள் இடைய மிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக திரிஷா இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews