வாலியிடமே அவரைப் பற்றி பங்கமாய் கலாய்த்து பல்ப் வாங்கிய பாடகர்… யார் தெரியுமா?

கவிஞர் வாலியை வாலிபக் கவிஞர் என்று தமிழ்த்திரை உலகில் அழைப்பார்கள். அவரது பாடல்களில் இளமை துள்ளும். அதனால் தான் அந்தப் பெயர் ஏற்பட்டது. அவரைப் பொறுத்தவரை அவரது உருவத்தில் அல்ல வயசு. அவரது எழுத்தில் தான் உள்ளது. அதனால் தான் அவருக்கு என்றும் இளமை கொண்ட அந்த வாலிபக் கவிஞர் பட்டம் கிடைத்தது. இவரும் பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமனுக்குமான அறிமுகம் சுவாரசியமானது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

ஸ்ரீரங்கத்தில் வாலியின் நண்பர் வீட்டில் கல்யாணம் நடந்தது. அங்கு பிரபல பின்னணிப் பாடகர் சிதம்பரம் சிஎஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்களாம். இவரை புக் செய்தவர் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி. இவர் சிதம்பரம் ஜெயராமனிடம் வாலியுடன் தான் நீங்கள் திருச்சி செல்கிறீர்கள் என்பதை சொல்ல மறந்து போனாராம்.

அந்த வகையில், சிதம்பரத்துக்கும், வாலிக்கும் அறிமுகமே இல்லை. ஆனால் வாலியுடன் சிதம்பரம் ஜெயராமன் காரில் செல்கிறார். அப்போது சிதம்பரம் ஜெயராமன் கச்சேரிக்கான பாடலை ஆலாபனை செய்ததும் அதைக் கேட்ட வாலி பலே பலே என பாராட்டினாராம்.

இதையும் படிங்க… தலைவர் 171 படமும் அட்டுக் காப்பியா?.. அட்லியை மிஞ்சிட்டாரே?.. இத்தனை கோடி வாங்கிட்டு ஏன் இப்படி?..

இருவரும் ஜாலியாகப் பேசிக் கொண்டு வந்தார்களாம். அப்போது வாலி தான் பாட்டு எழுதுபவர் என்றும் தான் ஏற்கனவே எழுதிய முருகன் பாடலைப் பற்றியும் ஜெயராமனிடம் கூறினாராம். அதைக் கேட்டு விட்டு ஜெயராமன் வாலியிடம் தம்பி நீங்க பாட்டு நல்லா எழுதுறீங்க.

Vaali, C.S.Jayaraman
Vaali, C.S.Jayaraman

உங்க எழுத்துல அர்த்தம் இருக்கு. நீங்க ஏன் சினிமாவுல பாட்டு எழுதக்கூடாது என்று கேட்டு இருக்கிறார். அதுமட்டும் போதாது என்று தம்பி இப்போ காலம் ரொம்ப கெட்டுப் போச்சி… தம்பி… விஸ்வநாதன் ராமமூர்த்திக்கிட்ட யாரோ வாலின்னு ஒருத்தன் நிறைய பாட்டு எழுதுறானாம். ஒரே கட்சிப்பாட்டா இருக்கு தம்பி. அவன் எழுத்துக்கு உங்க எழுத்து எவ்வளவோ மேல் தம்பி… என சொல்லி இருக்கிறார்.

அப்போது கார் திண்டிவனம் அருகில் வந்து விட்டது. அங்கு ஒரு டீ கடையில் டீ சாப்பிட கார் நிற்கிறது. அப்போது சில சிறுவர்கள் ஓடிவந்து, டேய் வாலிடா என ஆட்டோகிராப் வாங்கினார்களாம். அதைக் கண்ட உடன் சிதம்பரம் ஜெயராமனுக்குத் தர்ம சங்கடம் ஆகி விட்டதாம். அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இதையும் படிங்க… விடாமுயற்சி விபத்து சீன் வெளியிட்டு லைகாவை எச்சரிக்கிறாரா அஜித்?.. அந்த விஷயம் லீக் ஆகிடுச்சு?..

நீங்க தான் வாலின்னு தெரியாமப் பேசிட்டேன் தம்பி… நீங்களாவது உங்க பேரை சொல்லியிருக்கலாமே என்றாராம். அதற்கு நீங்க கேக்கவே இல்லையே என சிரித்து இருக்கிறார் கவிஞர் வாலி. காவேரி தண்ணிக்குக் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி தான் என கன்னத்தைக் கிள்ளினாராம் சிதம்பரம் ஜெயராமன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...