விடாமுயற்சி விபத்து சீன் வெளியிட்டு லைகாவை எச்சரிக்கிறாரா அஜித்?.. அந்த விஷயம் லீக் ஆகிடுச்சு?..

நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நேற்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென விடாமுயற்சி படத்தின் படிப்பின்போது ஏற்பட்ட விபத்து காட்சியை அப்படியே வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு விளக்கம் சொல்லும் வகையில் அஜித்குமார் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார். ஆனால், விடாமுயற்சி படம் டிராப் ஆகிவிட்டது என வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதற்கு விளக்கம் கொடுக்கவே இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

அஜித் விபத்து வீடியோ:

விடாமுயற்சி படம் டிராப் ஆகவில்லை என்பதை சொல்ல இப்படி ஒரு வீடியோவை வெளியிட வேண்டுமா என்கிற கேள்வி தற்பொழுது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும், லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த இடத்தில் ஆரம்பமாகிவிட்டது என ஒரு போஸ்டரை வெளியிட்டால் போதாதா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் கடந்த சில மாதங்களாக சூட்டிங் செல்லாத நிலையில், அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரை சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து தனது பைக் பாய்ஸ் உடன் காட்டுப்பகுதியில் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில், ஹைதராபாத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜ் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அஜித்குமார் அவருக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். பப்ளிசிட்டி பிடிக்காது என சொல்லிக்கொண்டிருக்கும் அஜித்குமார் திடீரென இப்படி தன்னைத்தானே பப்ளிசிட்டி செய்து வருவதற்கு என்ன காரணம் என யோசித்துக் கொண்டிருந்த நிலையில், லைக்கா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் தொழில்தான் சுரேஷ் சந்திராவை வைத்து இவை அனைத்தையும் அவர் செய்துள்ளதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

தலைவலியில் தல?:

இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி அறிவிக்கவில்லை என்றால் இதற்கு மேல் அந்த படத்தில் நடிக்கவே போவதில்லை என்கிற எச்சரிக்கை விழுந்தால் இப்படி ஒரு விபத்து வீடியோவை அஜித் தரப்பு வெளியிட்டுள்ளது என்றும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதற்கு முன்னதாக சுரேஷ் சந்திரா வெளியிட காரணம் என்ன? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

நடிகர் அஜித்குமார் பல மாதங்கள் தனது கால் சீட்டை லைக்கா வீணடித்து விட்டதாக கடும் அப்செட்டில் உள்ளார் என்றும் கூறுகின்றனர். அஜித்தின் வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் பயந்துபோய் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கிறார் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அஜித்துக்கு சாதகமாக அமையும் என நினைத்துக் கொண்டு வெளியிட்ட வீடியோவால் மகிழ் திருமேனி பிரேக் டவுன் எனும் ஹாலிவுட் படத்தில் இருந்து காட்சியை சுட்டால் இந்த படத்தில் வைத்திருக்கிறாரா? என்றும் இந்தப் படமே அந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப எதற்கு தேவையில்லாமல் ரிலீஸ் செய்தோம் என தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது அஜித் தரப்பு என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...