பேபி உருளைக்கிழங்கு வைத்து காஷ்மீரி தம் ஆலு… சாப்பிட ஆசையா இருக்கா? இதோ ரெசிபி!

உருளைக்கிழங்கு பிடிக்காத ஆளே இருக்காது, அந்த அளவிற்கு உருளைக்கிழங்கு வைத்து சமைக்கிற உணவு வகை எல்லாமே எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று, அப்படி காஷ்மீரில் மிகவும் பெமோஸான காஷ்மீரி தம் ஆலு எப்படி செய்யலாம் னு பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 500 கிராம்
வெங்காயம் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
தயிர் – 1 1/2 கப் (நன்கு அடித்தது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி
சோம்பு பொடி – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதன் தோலை உரித்து , பின் பொடியாக நறுக்கி உருளைக்கிழங்குகளை பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து தயிரில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி, சோம்பு பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, அதனுடன் தயிரை ஊற்றி நன்கு கிளறவும் , பின்பு 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் சுக்கா செய்யலாம் வாங்க…

குழம்பு நன்கு கொதித்ததும், அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து மூடி கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, நறுக்கிய கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான காஷ்மீரி தம் ஆலு ரெடி, இதனை சப்பாத்தி, நாண் மற்றும் சாதம் போன்றவற்றுடன் சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews